தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தொழிற்சாலை விபத்தில் இழப்பீடு ரூ.90 லட்சம் வழங்க நிர்வாகம் உறுதி

தொழிற்சாலை விபத்தில் இழப்பீடு ரூ.90 லட்சம் வழங்க நிர்வாகம் உறுதி

தொழிற்சாலை விபத்தில் இழப்பீடு ரூ.90 லட்சம் வழங்க நிர்வாகம் உறுதி


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தட்சிண கன்னடா: மங்களூரில் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு, 90 லட்சம் ரூபாய் வழங்குவதாக, தொழிற்சாலை நிர்வாகம் உறுதி அளித்து உள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரின் அருகில் கட்டிபல்லா எனற இடத்தில் மங்களூர் ரீபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் உள்ளது.

இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் மதியம் இங்குள்ள சி.எச்.டி., எனும், ஹைட்ரோ சல்பர் பிரிவில் வெடிவிபத்து ஏற்பட்டு, தீப்பற்றியது. இதில், மணிஷ் கர்கரே என்பவர் உயிரிழந்தார். எட்டு பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சங்கத்தினர், நேற்று காலை தொழிற்சாலைக்கு எதிராக, தொழிற்சாலை நுழைவு வாயில் முன் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த எம்.எல்.ஏ., உமாநாத் கோட்டியன், சம்பவ இடத்துக்கு வந்தார். தொழிலாளர்களுடனும், தொழற்சாலை நிர்வாகிகளுடனும் பேச்சு நடத்தினார்.

பின், உமாநாத் கோட்டியன் கூறியதாவது:

தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க இவ்விஷயத்தில் தலையிட்டேன். நிறுவன நிர்வாக இயக்குநருடன் பேச்சு நடத்தினேன். இதில், விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 90 லட்சம ரூபாய் வழங்கப்படும் என நிர்வாக இயக்குனர் தெளிவுபடுத்தி உள்ளார்.

ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களின் குடும்பத்திற்கும், 15 நாட்களுக்குள் 10 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு தொகை வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us