மாணவி சவுஜன்யா கொலை வழக்கு மறுவிசாரணை துவக்கிய எஸ்.ஐ.டி.,
மாணவி சவுஜன்யா கொலை வழக்கு மறுவிசாரணை துவக்கிய எஸ்.ஐ.டி.,
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 10:14 PM
மங்களூரு: கல்லுாரி மாணவி சவுஜன்யா கொலை வழக்கில், மறுவிசாரணையை எஸ்.ஐ.டி., நேற்று முதல் துவக்கி உள்ளது.
தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி உஜ்ரேயை சேர்ந்த கல்லுாரி மாணவி சவுஜன்யா பலாத்காரத்தில் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கவும், கர்நாடக அரசுக்கு, கடந்த மாதம் 21ம் தேதி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி சசிகுமார் தலைமையில், எஸ்.ஐ.டி., அமைக்கப்பட்டது. இந்த குழுவில், மங்களூரு போலீஸ் கமிஷனர் சுதிர்குமார் ரெட்டி, உளவுத்துறை எஸ்.பி., நிஷா ஜேம்ஸ், சி.ஐ.டி., – எஸ்.பி., லோகேஷ் ஜகல்சர், பெங்களூரு ரூரல் மாவட்ட டி.எஸ்.பி., வெங்கடேஷ் பிரசன்னா உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், மறுவிசாரணையை, எஸ்.ஐ.டி., நேற்று முதல் துவங்கியது. நிஷா ஜேம்ஸ், லோகேஷ் ஜகல்சர் ஆகியோர், நேற்று காலை பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மங்களூரு வந்தனர். மங்களூரு போலீஸ் கமிஷனர் சுதிர்குமார் ரெட்டியுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.
எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு வசதியாக, பெல்தங்கடி மற்றும் மங்களூரில், இரண்டு இடங்களில் தற்காலிக அலுவலகங்கள் அமைக்கும் பணியும் நடக்கிறது.
