தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வினய் குல்கர்னிக்கு உச்ச நீதிமன்றம் ‘ஷாக்’: யோகேஷ்கவுடா கொலை வழக்கில் தண்டனை உறுதியாகுமா?

வினய் குல்கர்னிக்கு உச்ச நீதிமன்றம் ‘ஷாக்’: யோகேஷ்கவுடா கொலை வழக்கில் தண்டனை உறுதியாகுமா?

வினய் குல்கர்னிக்கு உச்ச நீதிமன்றம் ‘ஷாக்’: யோகேஷ்கவுடா கொலை வழக்கில் தண்டனை உறுதியாகுமா?


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 10:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து பா.ஜ., கவுன்சிலர் யோகேஷ்கவுடா கொலை வழக்கில், காங்கிரசின் வினய்குல்கர்னிக்கு அளிக்கப்பட்ட தண் டனையை நிறுத்தி வைத்து , அவருக்கு ஜாமின் வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்றத்தின் மீது, உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து, பா.ஜ., கவுன்சிலராக இருந்த யோகேஷ்கவுடா, 2016ம் ஜூனில் படுகொலை செய்யப்பட்டார். கொலை வழக்கு சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது. பல கோணங்களில் விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி உட்பட, பலரை கைது செய்தனர்.

மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், இவர்களை குற்றவாளி என, உறுதி செய்து ஆயுள் தண்டனை விதித்து, நடப்பாண்டு ஏப்ரலில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில், வினய் குல்கர்னியும், மற்றவர்களும் மேல் முறையீடு செய்தனர்.

விசாரணை நடத்திய நீதிமன்றம் அவருக்கு மக்கள் பிரதிநிதிகள் விதித்த ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, நிபந்தனை ஜாமின் அளித்தது .

இது குறித்து, கேள்வி எழுப்பி சி.பி.ஐ.,யும், யோகேஷ்கவுடாவின் சகோதரர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனு, நீதிமன்ற நீதிபதிகளான பிரசாந்த்குமார் மிஸ்ரா, சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், நேற்று விசாரணை நடந்தது. வாதம், பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் செயல் குறித்து, அதிருப்தி தெரிவித்தனர்.

'கொலை போன்ற கடுமையான வழக்கில், எப்படி தடையுத்தரவு பிறப்பிக்க முடியும். இது போன்று, அனைத்து வழக்குகளிலும் தடையுத்தரவு பிறப்பித்தால், நாளை சட்டசபையில் கொலைகாரர்கள், கொள்ளையர்கள் நிரம்பி விடுவர்.

கொலை குற்றச்சாட்டை சுமந்துள்ள நபர்கள், மக்கள் பிரதிநிதிகளாக சட்டசபையில் இருக்க, உண்மையில் தகுதி உள்ளவர்களா. இப்படிப்பட்டவர்களை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து, தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என கருத்து தெரிவித்தனர்.

அப்போது வினய் குல்கர்னி தரப்பில் வாதிட்ட வக்கீல்கள், சி.பி.ஐ., மற்றும் யோகேஷ்கவுடாவின் சகோதரர் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், இவர்களின் வேண்டுகோளை நிராகரித்த நீதிபதிகள், மனுக்களை தள்ளுபடி செய்ய முடியாது என்றனர்.

அதன்பின் வினய் குல்கர்னி தரப்பு வக்கீல்கள், குறைந்தபட்சம் வாதிடவாவது கால அவகாசம் அளிக்கும்படி கோரினர். இதற்கு சம்மதித்த நீதிபதிகள், அக்டோபர் 9ம் தேதிக்கு, விசாரணையை ஒத்திவைத்தனர். வினய் குல்கர்னிக்கும், நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் கடுமையான நடவடிக்கையால், வினய் குல்கர்னியின் ஜாமின் ரத்தாகி, தண்டனை உறுதி செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என, நடுங்குகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us