தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மடாதிபதி பற்றி பொய் கருத்து அசோக் கேனி மீது போலீசில் புகார்

மடாதிபதி பற்றி பொய் கருத்து அசோக் கேனி மீது போலீசில் புகார்

மடாதிபதி பற்றி பொய் கருத்து அசோக் கேனி மீது போலீசில் புகார்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 10:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துமகூரு: மடாதிபதி சிவகுமார சுவாமி குறித்து பொய் கருத்து கூறியதாக, தொழில் அதிபர் அசோக் கேனி மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

துமகூரில் உள்ள சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவகுமார சுவாமி, 111. நடமாடும் கடவுள் என்று அழைக்கப்பட்ட இவர், கடந்த, 2019ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

இந்நிலையில், தொழிலதிபரும், நைஸ் நிறுவனத்தின் இயக்குநருமான அசோக் கேனி, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மறைந்த மடாதிபதி சிவகுமார சுவாமி என்னை ஒரு மகன் போல நடத்தினார்.

சிவலிங்கத்தை வைத்து வழிபடும் தங்க குடுவையை அவருக்கு அன்பளிப்பாக கொடுத்தேன். அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது, அந்த தங்க குடுவையும் சமாதிக்குள் வைக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.

ஆனால், அசோக் கேனியின் கருத்தை, மடத்தின் தற்போதைய மடாதிபதி சித்தலிங்க சுவாமி மறுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:

சிவகுமார சுவாமிக்கு, அசோக் கேனி தங்க குடுவையை அன்பளிப்பாக கொடுக்கவில்லை. அந்த தங்க குடுவையை, பல ஆண்டுகளுக்கு முன், மடத்தின் பக்தரான ஹுலிகுண்டே சோமண்ணா என்பவர் வழங்கினார். அந்த நேரத்தில் தங்க குடுவையை பெற மறுத்த சிவகுமார சுவாமி, ஏழை மாணவர்களுக்காக இரண்டு விடுதிகள் கட்டி தர கோரிக்கை வைத்தார். ஆனாலும் சோமண்ணாவின் அன்பு கோரிக்கையால் தங்க குடுவை பெற்று கொண்டார்.

அதை அவர் பயன்படுத்தவே இல்லை. தற்போதும் அது எங்களிடம் தான் உள்ளது. அசோக் கேனி கூறியது போல சமாதிக்குள் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், சிவகுமாரசுவாமி குறித்து பொய் கருத்து கூறி, அவரது பெயருக்கு அவதுாறு ஏற்படுத்த முயற்சிப்பதாக, அசோக் கேனி மீது, விஜய சேனை என்ற அமைப்பின் மாநில தலைவர் தீபக், துமகூரு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us