/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., ஆட்சி ஊழல் பற்றி விளம்பரம் து.மு., சிவகுமாரிடம் விசாரிக்க தடை
/
பா.ஜ., ஆட்சி ஊழல் பற்றி விளம்பரம் து.மு., சிவகுமாரிடம் விசாரிக்க தடை
பா.ஜ., ஆட்சி ஊழல் பற்றி விளம்பரம் து.மு., சிவகுமாரிடம் விசாரிக்க தடை
பா.ஜ., ஆட்சி ஊழல் பற்றி விளம்பரம் து.மு., சிவகுமாரிடம் விசாரிக்க தடை
ADDED : ஜூலை 04, 2025 11:21 PM
பெங்களூரு: பா.ஜ., ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுத்தது தொடர்பாக பதிவான அவதுாறு வழக்கில், துணை முதல்வர் சிவகுமாரிடம் விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியில், பல்வேறு அரசு பதவிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். பா.ஜ., அரசில் எந்தெந்த பதவிகளுக்கு எவ்வளவு பணம் என்ற விலைப்பட்டியலை, பத்திரிகைகளுக்கு விளம்பரமாக காங்கிரஸ் கொடுத்தது.
இதுகுறித்து பா.ஜ., - எம்.எல்.சி., கேசவ பிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில் ஹைகிரவுண்ட் போலீசார், அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான தற்போதைய முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் சிவகுமார், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு ராகுல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ராகுலுக்கு முன்ஜாமின் வழங்கியது. தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சிவகுமாரும், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரிக்கிறார்.
நேற்று நடந்த விசாரணையின்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிவகுமாரிடம் விசாரிக்க தடை விதித்தார். மனு மீதான அடுத்த விசாரணையை, வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.