/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆன்லைனில் விபரங்கள் பதிவு எஸ்.சி., பிரிவினருக்கு அறிவுரை
/
ஆன்லைனில் விபரங்கள் பதிவு எஸ்.சி., பிரிவினருக்கு அறிவுரை
ஆன்லைனில் விபரங்கள் பதிவு எஸ்.சி., பிரிவினருக்கு அறிவுரை
ஆன்லைனில் விபரங்கள் பதிவு எஸ்.சி., பிரிவினருக்கு அறிவுரை
ADDED : ஜூலை 03, 2025 05:13 AM
பெங்களூரு: எஸ்.சி., ஜாதிவாரி கணக்கெடுப்பு குழுவினர் ஸ்டிக்கர் ஒட்டிய வீடுகளில் உள்ளோர் மொபைல் போன் எண்ணிற்கோ இணையதளத்திலோ பதிவு செய்யும்படி, கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
கர்நாடகாவில் எஸ்.சி., பிரிவில் உள்ள 101 உட்பிரிவுகள் கணக்கெடுக்கும் பணி, மாநிலம் முழுதும் மே 5ல் துவங்கியது. இந்த பணி ஜூலை 6ல் முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பெங்களூரில் ஆய்வு பணியை அலட்சியத்துடன் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வீடுகளில் குடும்பத்தினர் இருக்கும்போதே விபரங்களை கேட்காமல், ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு எஸ்.சி., கணக்கெடுப்பு குழுவினர் சென்று விடுகின்றனர் என்ற வீடியோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியானது.
இதையடுத்து, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆய்வு நடத்த வரும் அதிகாரிகள், வீடுகளில் யாரும் இல்லாதபோது, அந்த வீட்டின் கதவு அல்லது சுவர்களில், ஸ்டிக்கர் ஒட்டுவர். அதில், உள்ள உதவி எண் மூலமாகவோ, கியூஆர் ஸ்கேனர் மூலமாகவோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்ற விபரம் குறிப்பிட்டிருக்கும்
94813 59000 என்ற மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு, விபரம் தெரிவிக்கலாம்
ஸ்டிக்கரில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால், இணையதளத்திற்கு இட்டுச் செல்லும். படிவங்களை நீங்களே ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம்
வீட்டில் உள்ளவர்களிடம் பேசாமல், ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்று குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் இதை அதிகாரிகள் கடைபிடிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது
ஆய்வு குழுவினர் இப்பகுதியில் ஆய்வு செய்துள்ளனர் என்பதை குறிக்கவே ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இது ஆய்வு நடத்தி முடித்துவிட்டனர் என்பதை குறிக்கும் ஸ்டிக்கர் அல்ல
உங்கள் வீடுகளுக்கு ஆய்வு குழுவினர் வரவில்லை என்றாலும், https://schedulecas tesurvey.karnataka.gov.in/selfdeclaration/ என்ற இணையதளத்தில் எஸ்.சி., பிரிவினர் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.