/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனநல பிரச்னையுள்ள கைதிகளை காப்பகங்களுக்கு அனுப்ப அறிவுரை
/
மனநல பிரச்னையுள்ள கைதிகளை காப்பகங்களுக்கு அனுப்ப அறிவுரை
மனநல பிரச்னையுள்ள கைதிகளை காப்பகங்களுக்கு அனுப்ப அறிவுரை
மனநல பிரச்னையுள்ள கைதிகளை காப்பகங்களுக்கு அனுப்ப அறிவுரை
ADDED : ஜூலை 14, 2025 05:35 AM
பெங்களூரு: கர்நாடகா சுகாதார துறை கமிஷனர் சிவகுமார் வெளியிட்ட அறிக்கை:
சிறையில் மன நலம் தொடர்பான பிரச்னைகளுடன் உள்ள கைதிகளை உடனடியாக மன நல காப்பகங்களுக்கு அனுப்ப வேண்டும். இது, மனநல பாதுகாப்பு சட்டம் 2017, பிரிவு 103ன் கீழ் நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது. இந்த பரிந்துரைகளை மாநில அரசு முழுமையாக ஏற்று கொண்டு உள்ளது.
சிறையில் கைதி மன நலம் பாதிக்கப்பட்டால் ஜெயிலர், சிறையின் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கவும். இதன் பிறகு, சிறையில் உள்ள மருத்துவர் சோதனையிட வேண்டும். மருத்துவர் சோதனையில் மன நல பிரச்னைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த கைதி மன நல காப்பகத்துக்கு மாற்றப்படலாம்.
இது குறித்த, அனைத்து தரவுகளையும் சேகரித்து கொள்ள வேண்டும். இதுபோன்று, பெண் கைதி யாரெனும் பாதிக்கப்பட்டால், அவர் சிறையில் இருந்து வெளியேற்றப்படும் வரை, பெண் போலீஸ் கட்டாயம் உடனிருக்க வேண்டும்.
இதுபோன்ற கைதிகளின் கைகளில் விலங்கிட கூடாது. அவசர சூழ்நிலை இருந்தால் மட்டுமே விலங்கிட வேண்டும். மன நல பிரச்னைகள் உடைய கைதிகளை வாகனங்களில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, தேவையான மருந்துகள், மருத்துவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.