தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வானில் சாகசம் நிகழ்த்திய விமானங்கள்: வியந்து பார்த்த மைசூரு மக்கள்

வானில் சாகசம் நிகழ்த்திய விமானங்கள்: வியந்து பார்த்த மைசூரு மக்கள்

வானில் சாகசம் நிகழ்த்திய விமானங்கள்: வியந்து பார்த்த மைசூரு மக்கள்


UPDATED : அக் 20, 2026 12:00 AM

ADDED : அக் 19, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 12:00 AM ADDED : அக் 19, 2026 08:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: மைசூரில் இரண்டாவது நாளாக நேற்று நடந்த விமான சாகச கண்காட்சியில், சூரியகிரண் விமானங்கள் சாகசங்கள் நிகழ்த்தின. இதை, மக்கள் வியந்து பார்த்து ஆர்ப்பரித்தனர்.

மைசூரு தசராவை முன்னிட்டு, இரண்டு நாட்கள் விமான சாகச கண்காட்சி நடத்த, ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

மோசமான வானிலை



அதன்படி நேற்று முன்தினம் விமான சாசக கண்காட்சி துவங்கியது. ஒன்பது சூரியகிரண் ரக விமானங்கள் வானில் இரண்டு ரவுண்டு வட்டமிட்ட நிலையில், மோசமான வானிலையால் சாசகம் நிறுத்தப்பட்டது. இதனால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஆனால், இரண்டாவது நாளான நேற்று, விமான சாகச கண்காட்சி முழுமையாக நடந்தது.

எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வந்த ஒன்பது சூரியகிரண் விமானங்கள், மைசூரு நகரில் பறந்தன.

குறிப்பாக பன்னி மண்டபத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள் செய்த சாகசம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

வண்ண புகைகளை வெளியிட்டபடியும், ஒன்றோடு ஒன்று மோதுவது போல பக்கத்தில் சென்று விலகியதையும் பார்த்து, பார்வையாளர்கள் வியப்படைந்து ஆர்ப்பரித்தனர்; கை தட்டியும், விசில் அடித்தும் உற்சாகம் அடைந்தனர். காலை 11:00 மணி முதல், 11:45 மணி வரை விமான சாகசம் நடந்தது. வானில் விமானங்கள் 10 ரவுண்ட் அடித்தன.

இதுபோல இரண்டாவது நாளாக நேற்றும் கம்பாலா போட்டிகள் நடந்தன. ஜோடி எருமைகள் ஓடுபாதையில் சீறி வந்ததை பார்த்து, மக்கள் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர்; மொபைல் போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

விண்ணை பிளந்தது



எருமைகள் சீறிப் பாய்ந்து வந்த போது, மக்கள் எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த உணவு ஸ்டால்களில், தங்களுக்கு விருப்பமான உணவுகளை வாங்கி சாப்பிட்டு ருசி பார்த்தனர். ஒட்டுமொத்தமாக விமான சாசக கண்காட்சியும், கம்பாலா போட்டியும், இரண்டு நாட்கள் மைசூரு மக்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us