/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிக்கபல்லாபூரில் பரவும் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல்
/
சிக்கபல்லாபூரில் பரவும் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல்
சிக்கபல்லாபூரில் பரவும் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல்
சிக்கபல்லாபூரில் பரவும் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல்
ADDED : ஆக 30, 2025 03:23 AM
சிக்கபல்லாபூர்: சிந்தாமணியில், ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த கால்நடைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணியின், ஹெப்பரி கிராமத்தில் உள்ள பண்ணையில், பன்றிகள் அடுத்தடுத்து இறந்தன. ஒரே வாரத்தில் 100 பன்றிகள் உயிரிழந்தன. இதற்கு காரணம் தெரியாமல் பண்ணை உரிமையாளர் குழம்பினார்.
பன்றிகள் இறப்பு குறித்து தகவலறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள், கிராமத்துக்கு சென்று, இறந்த பன்றிகளிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து, போபாலில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பினர்.
அங்கிருந்து நேற்று அறிக்கை வந்துள்ளது. பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே உஷாரான கால்நடைத்துறை, நோய் பாதிப்புள்ள பண்ணையில் இருந்து பன்றிகளை வேறு இடத்துக்கு மாற்ற, விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.
இங்கிருந்து பன்றிகள், ஹொஸ்கோட் வழியாக, நாகாலாந்துக்கு அனுப்பப்பட்டன. தற்போது நாகாலாந்துக்கு அனுப்புவதற்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
பண்ணையில் எஞ்சியுள்ள 57 பன்றிகளை கொல்லவும் முடிவு செய்துள்ளனர். பன்றி காய்ச்சல் பரவுவதால், கிராமத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
பயம் வேண்டாம்! பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் காய்ச்சல் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆப்பிரிக்கன் காய்ச்சல் பன்றிகளிடம் இருந்து, மனிதர்களுக்கு பரவாது. மக்கள் பயப்பட தேவையில்லை. ரங்கப்பா, துணை இயக்குநர், கால்நடைத்துறை

