/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வேளாண் கண்காட்சி இன்று துவக்கம்
/
வேளாண் கண்காட்சி இன்று துவக்கம்
ADDED : நவ 13, 2025 04:12 AM
பெங்களூரு: பெங்களூரு ஜி.கே.வி.கே., வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் 16ம் தேதி வரை வேளாண் கண்காட்சி நடக்கிறது.
பெங்களூரு ஹெப்பால் அருகில் உள்ள ஜி.கே.வி.கே., எனும் காந்தி வேளாண் அறிவியல் மையத்தில், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேஷ் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரு வேளாண் பல்லைக்கழகம், விவசாயம், தோட்டக்கலை, பட்டுக்கூடு, வனம், கால்நடை, மீன் வளம், பெண்கள், குழந்தைகள் நலத்துறைகள், கர்நாடக பால் கூட்டமைப்பு இணைந்து, இன்று முதல் 16ம் தேதி வரை, 'வளமான விவசாயம் - வளர்ந்த இந்தியா' என்ற முழக்கத்துடன் வேளாண் கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியை இன்று காலை 11:00 மணிக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் துவக்கி வைக்கிறார். பூச்சிகளின் அதிசயங்கள் குழந்தைகளையும், விவசாய ஆர்வலர்களையும் ஈர்க்கும்.
பூச்சிகளால் செய்யப்பட்ட நகைகள், உணவு பொருட்கள், பூச்சிகளை கவுரவிக்கும் வகையில் பல வெளிநாட்டு தபால் தலைகள் தொகுப்புகள் இடம் பெற்றிருக்கும்.
இந்திய, உள்ளூர் அலங்கார மீன்கள், இந்திய கெண்டை மீன், உள்நாட்டு பாரம்பரிய மீன் குஞ்சுகள், நன்னீர் முத்து வளர்ப்பு, மேம்படுத்தப்பட்ட மீன் இனங்களின் காட்சி, விற்பனையும் நடக்கிறது.
வேளாண் மேளாவில் கால்நடை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

