/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
5 ஆண்டும் சித்தராமையாவே முதல்வர் அறிவிக்க கோரி அஹிந்தா சமூகம் போராட்டம்
/
5 ஆண்டும் சித்தராமையாவே முதல்வர் அறிவிக்க கோரி அஹிந்தா சமூகம் போராட்டம்
5 ஆண்டும் சித்தராமையாவே முதல்வர் அறிவிக்க கோரி அஹிந்தா சமூகம் போராட்டம்
5 ஆண்டும் சித்தராமையாவே முதல்வர் அறிவிக்க கோரி அஹிந்தா சமூகம் போராட்டம்
ADDED : அக் 30, 2025 04:48 AM

மைசூரு:  'ஐந்து ஆண்டுகளும் சித்தராமையா தான் முதல்வர்' என, காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வலியுறுத்தி, மைசூரில் அஹிந்தா சமூகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
காங்கிரஸ் மேலிடம் போட்டுள்ளதாக கூறப்படும், இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி ஒப்பந்தப்படி, அடுத்த மாதத்துடன் சித்தராமையா, தன் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால் சித்தராமையாவே ஐந்து ஆண்டும் முதல்வராக இருப்பார் என, அவரது மகன் யதீந்திரா, ஆதரவு அமைச்சர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர்.
இது அப்பதவியை எதிர்பார்க்கும் துணை முதல்வர் சிவகுமார், அவரது ஆதரவாளர்களுக்கு பேரிடியாக உள்ளது. முதல்வர் பதவி விவகாரத்தில் ஆளுங்கட்சியை, எதிர்க்கட்சி தலைவர்கள் தினமும் கிண்டல் செய்கின்றனர்.
இந்நிலையில், மைசூரு ராமசாமி சதுக்கத்தில், அஹிந்தா எனும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தோர் ஒன்று கூடி நேற்று திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் பங்கேற்றவர்கள் கூறியது:
முதல்வர் பதவி விஷயத்தில், மாநிலத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளும் சித்தராமையா முதல்வராக இருப்பார் என்று, காங்கிரஸ் மேலிடம் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
வரும் 2028 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்போது, சிவகுமார் முதல்வராகட்டும். இந்த ஆட்சிக் காலம் முழுதும் சித்தராமையா தான் முதல்வராக இருக்க வேண்டும். ஒருவேளை அவரை பதவியில் இருந்து இறக்கினால், இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறாது.
கஷ்ட காலத்தில் அஹிந்தா சமூகம், காங்கிரசை முழுமையாக ஆதரித்துள்ளது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், இனி ஒருபோதும் காங்கிரசை ஆதரிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின், சித்தராமையாவை 5 ஆண்டுகளும் முதல்வராக அறிவிக்கக் கோரி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு கடிதம் அனுப்பும் போராட்டமும் நடத்தினர்.
அஹிந்தா சமூகத்தின் தலைவரென தன்னை கூறிக் கொள்ளும் சித்தராமையா, அஹிந்தா சமூகத்தை பயன்படுத்தி, தன் பதவியை தக்கவைத்துக் கொள்ளும் ஆட்டத்தை, சொந்த ஊரான மைசூரில் துவக்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
வரும் நாட்களில் மைசூரை போன்று மாநிலம் முழுதும் அஹிந்தா சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது.

