ADDED : ஏப் 01, 2026 04:11 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு: அரசு பள்ளிகளில் ஏ.ஐ., திறன் கொண்ட வருகை பதிவேடு திட்டத்துக்கு, 2.83 கோடி ரூபாய் விடுவிக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
கர்நாடகாவில் அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மாநில அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அவ்வகையில், மாணவர்களுக்கு ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு திறன் அடிப்படையிலான வருகை பதிவேட்டை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது.
இதற்கு 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. தற்போது, இத்திட்டதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக, 2.83 கோடி ரூபாயை விடுவிக்க மாநில அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. தரமான கருவிகளை வாங்கும் பொறுப்பு பள்ளி கல்வி கமிஷனரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
