பெங்களூரு விமான நிலையத்திற்கு மாந்திரீக பொருள் அனுப்பியவர் கைது
பெங்களூரு விமான நிலையத்திற்கு மாந்திரீக பொருள் அனுப்பியவர் கைது
ADDED : ஏப் 01, 2026 04:10 AM

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்திற்கு மாந்திரீக பொருட்களை பார்சல் மூலம் அனுப்பியவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு விமான நிலையத்தின் நிர்வாக அலுவலகத்தின் முகவரிக்கு கடந்த 28ம் தேதி பார்சல் வந்தது. பார்சலை பிரித்து பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பார்சலுக்குள் மாந்திரீகம் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் இருந்தன. இதுகுறித்து விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
பார்சல் எங்கிருந்து வந்தது என்று விசாரித்த போது, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சுபாஷ் ஜெய் என்பவர் அனுப்பியது தெரிந்தது. ஐதராபாத் சென்ற போலீசார், நேற்று முன்தினம் சுபாஷ் ஜெய்யை கைது செய்தனர். அவரை பெங்களூரு அழைத்து வந்தனர்.
கடந்த மாதம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தேன். இந்த அழகான விமான நிலையத்தில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்தது போன்ற துயரம் நடந்து விட கூடாது என்பதால், மாந்திரீகம் செய்த பொருட்களை இங்கு அனுப்பி வைத்தேன்.
'நானே கடவுள். இறைபக்தியுள்ள மனிதர்' என்று கூறினார். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
