sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 சின்னசாமி மைதானத்தில் கூட்டநெரிசலை தவிர்க்க   ஏ.ஐ., கேமரா; கிரிக்கெட் அசோசியேஷனுக்கு பரிந்துரை

/

 சின்னசாமி மைதானத்தில் கூட்டநெரிசலை தவிர்க்க   ஏ.ஐ., கேமரா; கிரிக்கெட் அசோசியேஷனுக்கு பரிந்துரை

 சின்னசாமி மைதானத்தில் கூட்டநெரிசலை தவிர்க்க   ஏ.ஐ., கேமரா; கிரிக்கெட் அசோசியேஷனுக்கு பரிந்துரை

 சின்னசாமி மைதானத்தில் கூட்டநெரிசலை தவிர்க்க   ஏ.ஐ., கேமரா; கிரிக்கெட் அசோசியேஷனுக்கு பரிந்துரை


ADDED : ஜன 17, 2026 06:24 AM

Google News

ADDED : ஜன 17, 2026 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஆண்டு நடந்த ஆர்.சி.பி., அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை.

இன்னும் சில மாதங்களில், ஐ.பி.எல்., போட்டிகள் துவங்க உள்ளன. இந்த போட்டிகளை எப்படியாவது சின்னசாமி மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற முயற்சியில், ஆர்.சி.பி., அணியும், கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷனும் இறங்கியுள்ளன.

இந்நிலையில், ஆர்.சி.பி., அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், செயற்கை நுண்ணறிவான, ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் இயங்கும், 300 முதல் 350 கண்காணிப்பு கேமராக்களை நிறுவுமாறு கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷனுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

இந்த கேமராக்கள் நிறுவுவதற்கு 4.50 கோடி ரூபாய் செலவாகும். இந்த செலவை ஆர்.சி.பி., நிர்வாகமே ஏற்கும்.

இந்த கேமராக்கள் மைதானத்தில் கூட்டநெரிசல் ஏற்படும் அறிகுறிகள் ஏதாவது இருந்தால், அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கும்.

இதன் மூலம் கூட்ட நெரிசல் அசம்பாவிதம் தவிர்க்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us