sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நாளை அபிராமி அந்தாதி பாராயணம்

/

 காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நாளை அபிராமி அந்தாதி பாராயணம்

 காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நாளை அபிராமி அந்தாதி பாராயணம்

 காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நாளை அபிராமி அந்தாதி பாராயணம்


ADDED : ஜன 17, 2026 06:25 AM

Google News

ADDED : ஜன 17, 2026 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவாஜி நகர்: திம்மையா சாலை, காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில், நாளை அபிராமி அந்தாதி, அபிராமி அம்மை பதிகம் பாராயணம் நடக்கிறது.

ஒரு தை அமாவாசை அன்று சரபோஜி மன்னர், பூம்புகாரில் கடலாடி, திருக்கடையூர் வந்தார். அப்போது, அபிராமி பட்டரிடம், இன்று என்ன திதி என்று கேட்க, அம்பாளின் முக அழகை மனத்தால் தரிசித்து கொண்டிருந்த அபிராமி பட்டர், இன்று பவுர்ணமி என்று கூறினார்.

அதை கேட்ட மன்னர், மாலை, 6:00 மணிக்கு சந்திரன் வராவிட்டால், பட்டரை சிறையில் அடைக்க உத்திரவிட்டார். நிலைமையை உணர்ந்த அபிராமி பட்டர், அந்தாதி பாட துவங்கினார். மாலை, 6:00 மணிக்கு அம்பாள், தன் தாடங்கத்தை வானில் எறிய, அது முழு நிலவாக பிரகாசித்தது.

அபிராமி பட்டரின் பெருமையை உணர்ந்த மன்னர், அந்தவூரை சுற்றி உள்ள நஞ்சை நிலத்தில் விளையும் நெல்லில் ஒரு பகுதியை, அபிராமி பட்டருக்கு வழங்க செப்பு பட்டயம் எழுதி வழங்கினார். அது, இன்றும் அபிராமி பட்டரின் சந்ததியரிடம் உள்ளது.

அதை நினைவு கூறும் வகையில், பெங்களூரு சிவாஜி நகர் திம்மையா சாலையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில், தைஅமாவாசையை ஒட்டி, நாளை காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை அபிராமி அந்தாதி, அபிராமி அம்மை பதிகம் பாராயணம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us