/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுத்துார் மடத்தில் மஹோத்சவம் 135 ஜோடிகளுக்கு கூட்டு திருமணம்
/
சுத்துார் மடத்தில் மஹோத்சவம் 135 ஜோடிகளுக்கு கூட்டு திருமணம்
சுத்துார் மடத்தில் மஹோத்சவம் 135 ஜோடிகளுக்கு கூட்டு திருமணம்
சுத்துார் மடத்தில் மஹோத்சவம் 135 ஜோடிகளுக்கு கூட்டு திருமணம்
ADDED : ஜன 17, 2026 06:26 AM

மைசூரு: சுத்துார் திருவிழா மஹோத்சவத்தை ஒட்டி, 135 ஜோடிகளுக்கு, மடாதிபதி தலைமையில் கூட்டு திருமணம் நடத்தப்பட்டது.
மைசூரு சுத்துார் மடத்தின் திருவிழா மஹோத்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று, மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகள் தலைமையில், நான்கு வீரசைவ லிங்காயத், 84 எஸ்.சி., - 15 எஸ்.டி., - 21 பிற்படுத்தப்பட்டோர் - 11 கலப்பு திருமண ஜோடி என, 135 ஜோடி மணமக்களுக்கு கூட்டுத்திருமணம் நடந்தது.
இதில், ஐந்து ஜோடிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள், மூன்று மாற்றுத்திறனாளிகள், மூன்று மறுதிருமண ஜோடிகள்.
சுத்துார் மடம் சார்பில், 2000 முதல் 2025 வரை 3,346 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. 2009 முதல் 2025 வரை, மாதந்தோறும், 540 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மடம் சார்பில் மணமக்களுக்கு சட்டை, வேஷ்டி, மணமகள்களுக்கு சேலை, ரவிக்கை, மாங்கல்யம் வழங்கப்பட்டது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., தேஷ் பாண்டே, மணமக்களுக்கு தாலியை எடுத்து கொடுத்தார்.
இது தவிர, அமைச்சர்கள் ராமலிங்க ரெட்டி, மங்கள் வைத்யா, முன்னாள் அமைச்சர் ஆலம் வீரபத்ரப்பா, பேராயர் பிரான்சிஸ், அருட்தந்தை கேப்ரியல் மார் கிரிகோரஸ் உட்பட பலர் பங்கேற்றனர். ஆறு நாட்கள் நடக்கும் மஹோத்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக ஆண்கள், பெண்கள் என ஐந்து கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மைசூரு சுத்துார் மடத்தில் நடந்த மஹோத்சவத்தில், திருமணம் செய்து கொண்ட 135 ஜோடிகளும், மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகளுடன் குழுவாக படம் எடுத்துக் கொண்டனர்.

