தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிவகுமாரை சந்திக்காத ராகுல் அமைச்சர் ஜார்ஜ் உடன் பேச்சு

 சிவகுமாரை சந்திக்காத ராகுல் அமைச்சர் ஜார்ஜ் உடன் பேச்சு

 சிவகுமாரை சந்திக்காத ராகுல் அமைச்சர் ஜார்ஜ் உடன் பேச்சு


ADDED : ஜன 17, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: டில்லியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை சந்திக்க துணை முதல்வர் சிவகுமார் முயன்றும் முடியவில்லை. அவருக்கு நேரம் ஒதுக்கித் தரவில்லை.

அதேநேரத்தில், முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளரான மின்துறை அமைச்சர் ஜார்ஜை மட்டும், ராகுல் சந்தித்தது சர்ச்சையாகி உள்ளது.

முதல்வர் பதவியை பெற துணை முதல்வர் சிவகுமார் தீவிரமாக முயற்சிக்கிறார். மற்றொரு பக்கம் பதவியை தக்க வைத்துக்கொள்ள, முதல்வர் சித்தராமையாவும் காய் நகர்த்தி வருகிறார்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, முதல்வர் மாற்றத்தில் விருப்பம் இல்லை. சித்தராமையாவே பதவியில் நீடிக்க வேண்டும் என்பது, அவரது எண்ணம்.

ராகுலின் மனதை கரைக்க, சிவகுமாரும் பலவிதமாக முயற்சிக்கிறார். பலமுறை டில்லிக்கு சென்றும் ராகுலை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. மற்றொரு பக்கம் மூத்த தலைவர் சோனியாவை சந்திக்க, சித்தராமையா ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர்.

இதற்கிடையே, முதல்வர் சித்தராமையா தன் ஆதரவாளர்களில் ஒருவரான அமைச்சர் ஜார்ஜை, ராகுலை சந்திக்க டில்லிக்கு அனுப்பியுள்ளார். 2013 முதல் 2018 வரை சித்தராமையா அரசிலும், ஜார்ஜ் அமைச்சராக இருந்தார். அன்று முதல் நெருக்கமாகினர்.

காங்கிரஸ் மேலிட தலைவரான சோனியாவுக்கு நெருக்கமானவர்களில், ஜார்ஜும் ஒருவர். கர்நாடக அரசியல் விஷயத்தில், இவரது கருத்துகளுக்கு சோனியா முக்கியத்துவம் அளிப்பார். அதேபோன்று முதல்வர் மாற்றத்திலும், ஜார்ஜின் ஆலோசனையை தீவிரமாக கருதுவார்.

எனவே, முதல்வர் சித்தராமையா, தன் சார்பில் ஜார்ஜை டில்லிக்கு அனுப்பினார். அவரும் டில்லியில் நேற்று மாலை சோனியாவின் இல்லத்துக்கு சென்றார்.

அவர் இல்லாததால், ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் மாற்றம் விவகாரம் சூடு பிடித்த பின், தன்னை சந்திக்க சிவகுமாருக்கு ராகுல் வாய்ப்பே அளிக்கவில்லை.

தமிழகத்துக்கு செல்ல மைசூருக்கு வந்த போது, ராகுலை சந்தித்த சிவகுமார், முதல்வர் மாற்றம் குறித்து பேச முற்பட்ட போது, 'விமான நிலையத்தின் ரன்வேயில் இதை பற்றி பேச வேண்டாம். டில்லிக்கு வாருங்கள்' என்று, கூறியிருந்தார்.

அதன்படி சிவகுமார் நேற்று டில்லிக்கு சென்றார். அவருக்கு நேரம் ஒதுக்கி தராத ராகுல், அமைச்சர் ஜார்ஜுக்கு நேரம் ஒதுக்கி ஆலோசனை நடத்தியது சர்ச்சையாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us