sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 குடிநீர் விநியோகத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம் பெங்களூரு குடிநீர் வாரியம் சாதனை

/

 குடிநீர் விநியோகத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம் பெங்களூரு குடிநீர் வாரியம் சாதனை

 குடிநீர் விநியோகத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம் பெங்களூரு குடிநீர் வாரியம் சாதனை

 குடிநீர் விநியோகத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம் பெங்களூரு குடிநீர் வாரியம் சாதனை


ADDED : ஜன 20, 2026 06:33 AM

Google News

ADDED : ஜன 20, 2026 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: உலகிலேயே ஏ.ஐ., தொழில்நுட்பத்தை செயல்படுத்திய, முதல் குடிநீர் வாரியம் என்ற பெருமை பெற்றுள்ள பெங்களூரு குடிநீர் வாரியம், தன் கட்டுப்பாட்டில் உள்ள 78 பம்பிங் ஸ்டேஷன்களில், ஏ.ஐ., தொழில்நுட்ப அடிப்படையில் செயல்படும் 'ஐபம்ப்நெட்' எனப்படும் ஸ்மார்ட் பம்ப் மானிட்டரிங் மற்றும் ஆப்டிமைசேஷன் சிஸ்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து, பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறியதாவது:

குடிநீர் வாரியம் குடிநீர் விநியோகத்தில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. எனவே ஆண்டு தோறும் குடிநீர் வாரியத்துக்கு, 40 கோடி ரூபாய் மின் கட்டண செலவு குறையும் என, எதிர்பார்க்கிறோம். இத்தகைய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்திய உலகின் முதல் குடிநீர் வாரியம் என்ற பெருமை, குடிநீர் வாரியத்துக்கு கிடைத்துள்ளது.

'ஐபம்ப்நெட்' என்பது, பம்ப் அகாடமி பிரைவேட் லிமிடெட் உருவாக்கிய இணைய தளம் அடிப்படையிலான தொழில்நுட்பமாகும், இது நீர் பயன்பாடுகள், நீரேற்று நிலையங்களின் செயல்திறன் மற்றும் ஆற்றல் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.

இது பம்புகள், மோட்டார்கள், சென்சார்கள் அடங்கிய 'ஐபம்ப்நெட் கனெக்ட்' பம்ப்கள் மற்றும் கிளவுட் பிளாட்பார்ம் இடையே தொடர்பை ஏற்படுத்தும். இது நீரின் வேகம், அழுத்தம், பாயும் அளவு, வெப்பநிலை, மின் பயன்பாடு என, அனைத்து அம்சங்களையும் சேகரித்து, டேட்டாவை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். இந்த தொழில்நுட்பம் பல விதங்களிலும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us