தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பிரஜ்வல் மேல்முறையீட்டு மனு அரசுக்கு அவகாசம்

 பிரஜ்வல் மேல்முறையீட்டு மனு அரசுக்கு அவகாசம்

 பிரஜ்வல் மேல்முறையீட்டு மனு அரசுக்கு அவகாசம்


ADDED : ஜன 20, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 06:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'பாலியல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரி, பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சந்தோஷ், வெங்கடேஷ் நாயக் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

பிரஜ்வல் தரப்பு வக்கீல் சித்தார்த் லுாத்ரா வாதிடுகையில், ''மரபணு, டிஜிட்டல் ஆதாரங்களை பதிவு செய்ய கோரி இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.

அரசு தரப்பு வக்கீல் ஜெகதீஷ், ''ஒரு வாரத்துக்குள் ஆட்சேபனை தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.

நீதிபதிகள் கூறுகையில், 'சி.ஆர்.பி.சி., பிரிவு 391ன் கீழ், மரபணு, டிஜிட்டல் ஆதாரங்களை பதிவு செய்ய கோரி, பிரஜ்வல் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. இம்மனு மீதான விசாரணை, ஜன., 30ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us