தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'காற்று வாங்கும்' இந்திரா உணவகங்கள் உணவுகளின் தரத்தை மேம்படுத்த முடிவு

 'காற்று வாங்கும்' இந்திரா உணவகங்கள் உணவுகளின் தரத்தை மேம்படுத்த முடிவு

 'காற்று வாங்கும்' இந்திரா உணவகங்கள் உணவுகளின் தரத்தை மேம்படுத்த முடிவு


ADDED : பிப் 17, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''பெங்களூரில் இந்திரா உணவகங்களுக்கு சாப்பிடுவதற்கு வாடிக்கையாளர்கள் வரவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை,'' என, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மஹேஸ்வர் ராவ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி:

சாலை ஓரத்தில் உள்ள ஹோட்டல்கள், நடைபாதை உணவகங்களுக்கு சென்று, பொது மக்கள் சாப்பிடுகின்றனர். ஆனால் இந்திரா உணவகங்களுக்கு வருவது இல்லை.

இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. அங்கு துாய்மை இல்லை; உணவும் தரமாக இல்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநகராட்சி அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தப்படும்.

இந்திரா உணவகங்களை துாய்மையாக பராமரிக்கவும், உணவின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவின் மெனுவை மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க, நடவடிக்கை எடுப்போம்.

இந்திரா உணவகம் மிக சிறந்த திட்டமாகும். உழைக்கும் வர்க்கத்தினருக்கு, மிகவும் குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது. இவ்வளவு குறைந்த விலையில், யாரும் உணவு வழங்க மாட்டார்கள். அப்படி இருந்தும் வாடிக்கையாளர்கள் வராதது, எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.

பெங்களூரில் புதிதாக இந்திரா உணவகம் திறக்க, இடங்களை அடையாளம் காண்கிறோம். அதற்கு முன் ஏற்கனவே உள்ள உணவகங்களை தரம் உயர்த்துவோம்.

முதல்வரின் சிறப்பு நிதியை பயன்படுத்தி, பெங்களூரின் சாலைகள் மேம்படுத்தப்படும். 1,200 கோடி ரூபாய் செலவில், தரமான பணிகள் நடக்கின்றன. இரண்டு மாதங்களில் சாலைகளின் வடிவமே மாறும்.

வீட்டு முன் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, கட்டணம் விதிப்பது குறித்து, ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் ஆலோசிக்கப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் கவுன்சில் இருந்த போதும், இது பற்றி ஆலோசித்தனர்.

ஆனால் வீட்டு முன் நிறுத்தும் வாகனத்துக்கு கட்டணம் விதித்தால், மக்களுக்கு கோபம் வரும்; எனவே இது குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை.

கட்டணம் விதித்தால் வீட்டு சுற்றுப்பகுதிகளில் பார்க்கிங் வசதி செய்ய வேண்டி வரும். எந்த வசதியும் செய்யாமல், கட்டணம் விதித்தால் பிரச்னை ஏற்படும். முன்னேற்பாடுகள் செய்த பின்னரே, ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us