/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐஸ்வர்யா கவுடா மீதான மோசடி வழக்குகள் சி.ஐ.டி.,க்கு மாற்றம்
/
ஐஸ்வர்யா கவுடா மீதான மோசடி வழக்குகள் சி.ஐ.டி.,க்கு மாற்றம்
ஐஸ்வர்யா கவுடா மீதான மோசடி வழக்குகள் சி.ஐ.டி.,க்கு மாற்றம்
ஐஸ்வர்யா கவுடா மீதான மோசடி வழக்குகள் சி.ஐ.டி.,க்கு மாற்றம்
ADDED : ஜூன் 18, 2025 11:12 PM

பெங்களூரு: காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் பெயரை பயன்படுத்தி, நகைக்கடைகளில் நகை வாங்கி மோசடி செய்த ஐஸ்வர்யா கவுடா மீதான வழக்குகளை, சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு மாற்றி உள்ளது.
மாண்டியாவின் மலவள்ளி கிருகாவலு கிராமத்தின் ஐஸ்வர்யா கவுடா, 33. பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசிக்கிறார். துணை முதல்வர் சிவகுமார் தம்பியும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷ் தங்கை என்று கூறி, சந்திரா லே -அவுட்டில் உள்ள நகைக்கடையில் 8.50 கோடி ரூபாய்க்கு நகை வாங்கி மோசடி செய்தார்.
நகைக்கடை உரிமையாளர் வனிதா அளித்த புகாரில், ஐஸ்வர்யா கைதானார். பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் சில நகைக்கடைகளில் நகை வாங்கி பணம் கொடுக்காமல் ஏமாற்றியது, நிலம் வாங்கித் தருவதாக சிலரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக பெங்களூரு ஆர்.ஆர்.நகர், மாண்டியா போலீஸ்நிலையங்களில் ஐஸ்வர்யா மீது வழக்குகள் பதிவாகின.
இதற்கிடையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஐஸ்வர்யாவை அமலாக்கத்துறை கைது செய்தது. பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த அவருக்கு, நேற்று முன்தினம் ஜாமின் கிடைத்தது. நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், மோசடி தொடர்பாக சந்திரா லே - அவுட், ஆர்.ஆர்.நகர், மாண்டியா போலீஸ் நிலையங்களில், ஐஸ்வர்யா மீது பதிவான வழக்குகளை, சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி அரசு நேற்று உத்தரவிட்டது.
ஆர்.ஆர்.நகர், சந்திரா லே - அவுட் போலீஸ் நிலையங்களில் பதிவான வழக்குகளை, பேட்ராயனபுரா ஏ.சி.பி., பரத் ரெட்டி விசாரித்து வந்தார்.
விசாரணை என்ற பெயரில் தனக்கு தொல்லை கொடுப்பதாக, பரத் ரெட்டி மீது ஐஸ்வர்யா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.