தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அஜித் பவார் திடீர் மறைவு சட்டசபையில் புகழாரம்

 அஜித் பவார் திடீர் மறைவு சட்டசபையில் புகழாரம்

 அஜித் பவார் திடீர் மறைவு சட்டசபையில் புகழாரம்


ADDED : ஜன 29, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மறைவுக்கு, கர்நாடக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கர்நாடக சட்டசபை நேற்று காலை துவங்கியதும், மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், விமான விபத்தில் இறந்தது பற்றி, சட்டசபை கவனத்திற்கு கொண்டு வந்த சபாநாயகர் காதர், இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.

இந்த தீர்மானத்தின் மீது சட்ட துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் பேசுகையில், ''அஜித் பவார் இந்த நாடு கண்ட மிக சிறந்த அரசியல்வாதி. பாராமதி சட்டசபை தொகுதியில் இருந்து எட்டு முறை எம்.எல்.ஏ., ஆகி உள்ளார். மஹாராஷ்டிரா தேர்தலின் போது, அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். அவர் ஒரு முடிவை எடுத்தால் அதில் உறுதியாக இருப்பார். கூட்டுறவு, நீர்பாசன துறையில் நிறைய சாதனை படைத்து உள்ளார்,'' என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசுகையில், ''தாதா என்று மஹாராஷ்டிரா மக்களால் செல்ல பெயர் வைத்து அழைக்கப்பட்ட அஜித் பவார் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது அரசியல் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், துணிச்சலாக முடிவுகளை எடுத்தார். அவரது மறைவு தேசியவாத காங்கிரசுக்கு பேரிழப்பு. அவரது ஆதரவாளர்களுக்கு வலியை தாங்கும் சக்தியை கடவுள் கொடுக்கட்டும்,'' என்றார்.

அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பேசுகையில், ''பெலகாவி மாவட்டம், மஹாராஷ்டிரா மாநில எல்லையில் உள்ளதால், அஜித் பவாருக்கு, பெலகாவியில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பாராமதி தொகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்த அவரது திடீர் மரணத்தை நம்ப முடியவில்லை,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us