தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பாம்பிடம் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றி உயிரிழந்த வளர்ப்பு நாய்

 பாம்பிடம் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றி உயிரிழந்த வளர்ப்பு நாய்

 பாம்பிடம் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றி உயிரிழந்த வளர்ப்பு நாய்


ADDED : ஜன 29, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: விஷப்பாம்புடன் போராடிய வளர்ப்பு நாய், தன் உரிமையாளரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்தது.

சிக்கமகளூரு மாவட்டம், தரிகெரே தாலுகாவின், இட்டிகே கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தினர், 'ராட் வீலர்' இன நாய் வளர்க்கின்றனர். நேற்று முன்தினம் மாலை, இவர்களின் வீட்டுக்குள் நாகப்பாம்பு நுழைய முற்பட்டது. இதை வீட்டில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை. ஆனால் வாசலில் இருந்த நாய் பார்த்துவிட்டது.

உடனடியாக பாம்பை உள்ளே நுழைய விடாமல் தடுக்க பாய்ந்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி அதை கொன்றது. பாம்பு கடித்ததில் நாய் உடலில் விஷம் ஏறியது. பாம்பை கொன்றுவிட்டு, சோர்வாக தன் கூண்டுக்குள் சென்று படுத்து கொண்டது. சிறிது நேரத்தில் விஷம் தலைக்கேறி உயிரிழந்தது.

பாம்பு வீட்டுக்குள் புகுந்ததை, நாய் கவனித்திருக்கா விட்டால், குடும்பத்தில் யாருக்காவது அபாயம் ஏற்பட்டிருக்கும். தங்களை காப்பாற்ற உயிரை கொடுத்த நாயை, வீட்டினர் கவுரவத்துடன் அடக்கம் செய்தனர். பாம்பையும் சாஸ்திரப்படி அடக்கம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us