/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமியர், பெண்கள் பாதுகாப்புக்கு 'அக்கா படை' நாளை துவக்கம்
/
சிறுமியர், பெண்கள் பாதுகாப்புக்கு 'அக்கா படை' நாளை துவக்கம்
சிறுமியர், பெண்கள் பாதுகாப்புக்கு 'அக்கா படை' நாளை துவக்கம்
சிறுமியர், பெண்கள் பாதுகாப்புக்கு 'அக்கா படை' நாளை துவக்கம்
ADDED : ஆக 13, 2025 11:00 PM

பெங்களூரு: ''சிறுமியர், பெண்களின் பாதுகாப்புக்காக, முதல் கட்டமாக மூன்று மாவட்டங்களில் நாளை முதல், 'அக்கா படை' துவங்கப்படும்,'' என பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சமி ஹெப்பால்கர், சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் சுரேஷ் பாபுவின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறியதாவது:
சமூகத்திற்கு பேரிடரான குழந்தை திருமணத்தை, வேருடன் பிடுங்கி எறிய வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்க அரசு தயாராக உள்ளது.
சில சமூகங்கள், பழங்குடியினர் வழக்கப்படி, குழந்தை திருமணங்கள் இன்னும் நடந்து வருகிறது. இதனால் சிறுமியர் கர்ப்பம் அடையும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதை தடுக்க சட்டங்கள் உள்ளன. பெண்கள், குழந்தைகள் நலத்துறையின் கீழ், சி.டபிள்யூ.சி., எனும் குழந்தைகள் பாதுகாப்பு குழு செயல்பட்டு வருகிறது.
பெங்களூரில் நான்கும், மற்ற மாவட்டங்களில் தலா ஒன்றும் இக்குழு செயல்பட்டு வருகின்றன.
கல்வி, சுகாதாரம், உள்துறை, சமூக நலம், வருவாய், பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் துறைகள் இணைந்து செயல்படும்.
குழந்தைகள் பாதுகாப்புக்கு, '1098' என்ற உதவி எண், 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
குழந்தைகள் பாதிக்கப்படுவதாக அழைப்பு வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக அக்குழந்தையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பர்.
கிராம பஞ்சாயத்து முதல் மாவட்டம் வரை, பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக, அவர்களின் உரிமைகளை பாதுகாக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவியர், பெண்களின் பாதுகாப்புக்காக, பெண் போலீசாரை உள்ளடக்கிய, 'அக்கா படை' ஏற்கனவே பீதர் மாவட்டத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. நாளை சுதந்திர தினத்தன்று, மைசூரு, பெலகாவி, மங்களூரு மாவட்டங்களில் 'அக்கா படை' துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.