/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மதுபானம் விலை உயர்வு 'குடி' மகன்கள் வேதனை
/
மதுபானம் விலை உயர்வு 'குடி' மகன்கள் வேதனை
ADDED : மே 16, 2025 05:25 AM
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை பீர் விலை உயர்த்தப்பட்டது. இதனால், மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் கலால் துறைக்கு 40,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதை அடைய மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், பீர் மீதான கலால் வரியை 10 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு மதுபானம் வணிகர்கள் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது; விற்பனை பாதிக்கும் என அரசிடம் முறையிட்டது. நேற்று முதல் பீர் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் மீதான கலால் வரியை ஐந்து சதவீதம் உயர்த்தியது. இதனால், கலால் வரி 195 சதவீதத்திலிருந்து 200 சதவீதமாக உயர்ந்தது.
வரி உயர்வால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 180 மி.லி.,யான குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 முதல் 15 ரூபாயும்; 750 மி.லி.,யான முழு பாட்டிலுக்கு 50 முதல் 100 ரூபாயும்; பீர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த விலை உயர்வால் மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உத்தரவாத திட்டங்களுக்காக 'எங்கள் பாக்கெட்டில் அரசு கை வைக்கிறது' என மதுப்பிரியர்கள் குமுறுகின்றனர்.