sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பாகல்கோட் இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்

/

 பாகல்கோட் இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்

 பாகல்கோட் இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்

 பாகல்கோட் இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்


ADDED : மார் 17, 2026 06:11 AM

Google News

ADDED : மார் 17, 2026 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகல்கோட்: ''பாகல்கோட் தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய் யப்பட்டு உள்ளன,'' என, மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சங்கப்பா தெரிவித்தார்.

இது தொடர்பாக, நேற்று அவர் அளித்த பேட்டி:

பாகல்கோட் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு பின், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 3ம் தேதி கடைசி நாளாகும். 24ல் பரிசீலனை; வேட்பு மனு திரும்ப பெற 26ம் தேதி கடைசி நாளாகும்.

ஏப்., 9ல் ஓட்டுப்பதிவும்; மே 4ல் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. எனவே தேர்தல் நடத்தை விதிகள் மே 6ம் தேதி வரை மாவட்டம் முழுதும் அமலில் இருக்கும். இத்தொகுதியில் 319 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1,26,761 ஆண்களும், 1,32,476 பெண்களும் என மொத்தம் 2,59,260 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 40 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேநேரத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி சஷிதர் குரேரா கூறுகையில், ''வங்கியில் இருந்து 50,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க விரும்பினால், அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், உங்களிடம் விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.

மாவட்ட எஸ்.பி., சித்தார்த் கோயல் கூறுகையில், ''தேர்தல் தொடர்பாக, அனைத்து தாலுகா எல்லைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எந்தவித பிரச்னையும் ஏற்படாமல் இருக்க, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன,'' என்றார்.






      Dinamalar
      Follow us