தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஓட்டு திருட்டு குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம்: சிவகுமார்

 ஓட்டு திருட்டு குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம்: சிவகுமார்

 ஓட்டு திருட்டு குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம்: சிவகுமார்


ADDED : செப் 27, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''ஓட்டு திருட்டு குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்,'' என முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

நாடு முழுதும் ஓட்டு திருட்டு நடந்தது பற்றி விவாதிக்க, காங்கிரஸ் மேலிடம் செயற்குழு கூட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதன் பின்னணியில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை அவரது வீட்டில் சந்தித்தேன். தேர்தல் ஆணையத்தில் நிலவும் கருத்து வேறுபாடு குறித்து இருவரும் விவாதித்தோம்.

நாடு முழுதும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், கட்சியின் எதிர்கால போராட்டங்கள் குறித்தும் ஆலோசித்தோம்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்த பின், ஓட்டு திருட்டு குறித்து விவாதிக்க, கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும். தேர்தல் ஆணையம் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.

வாரியங்களுக்கு தலைவர்களை நியமிப்பது பற்றி, கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவி அளித்து விட்டு, கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.

காலியாக இருக்கும் இடத்திற்கு பெண் அமைச்சரை நியமிப்பது பற்றி, டில்லி செல்லும் போது மேலிட தலைவர்களிடம் பேசுவேன்.

மரண கடிதம் எழுதிவிட்டு தலைமறைவான, கதக் உதவி பொறியாளர் மீது பல புகார்கள் உள்ளன. இதுகுறித்து விசாரணை நடக்கிறது. கடந்த காலத்திலும் அவர் மாயமான சம்பவங்கள் நடந்துள்ளன. அவர் அஜ்மீருக்கு சென்றதாக தகவல் உள்ளது.

பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்கு, விவசாயிகளை வற்புறுத்தி நாங்கள் நிலம் வாங்கவில்லை. அப்படி இருக்கும் போது, ஏன் சாலையை மறித்து போராட வேண்டும். பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். டவுன்ஷிப் திட்டத்தை நிறைவேற்றுவதில் எனக்கு அவசரமோ, கவுரவமோ இல்லை. குமாரசாமி துவங்கிய திட்டத்தை நான் தொடர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us