மொபைல் போன், லேப்டாப் திருடிய ஆந்திர வாலிபர் கைது
மொபைல் போன், லேப்டாப் திருடிய ஆந்திர வாலிபர் கைது
ADDED : செப் 27, 2026 11:11 PM
ஆவலஹள்ளி: தங்கும் விடுதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12 மொபைல் போன்கள்; 10 லேப்டாப்களை திருடிய ஆந்திர வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு ஆவலஹள்ளி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த 20 வயது ஆணின் மொபைல் போன், கடந்த 22ம் தேதி திருட்டு போனதாக ஆவலஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சம்ப வம் நடந்த தங்கும் விடுதியை போலீசார் சோதனையிட்டனர். அவரது அறையில் தங்கியிருப்பவர்கள் மற்றும் பிற அறைகளில் தங்கியிருப்பவர்களிடம் விசாரித்தனர். அப்போது, சிலரது மொபைல் போன்கள் காணாமல் போனது தெ ரிந்தது.
இதையடுத்து, தங்கும் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, இரவு நேரத்தில் பையுடன் வந்த நபர், பூட்டப்படாமல் இருந்த லெனின் அறைக்குள் சென்று மொபைல் போனை திருடிவிட்டு தப்பியது தெரிந்தது. அந்த நபரின் படத்தை அடையாளமாக கொண்டு போலீசார் விசாரித்ததில், அவர் பல தங்கும் விடுதிகளில் திருடியது தெரிந்தது.
இதற்கிடையே, அந்நபர் தமிழகத்தின் சென்னைக்கு தப்பினார். அவரை பிடிக்க சென்னைக்கு சென்ற போலீசார், உள்ளூர் போலீசார் உதவியுடன் விசாரித்தனர். மெரினா கடற்கரை அருகே சுற்றித் திரிந்தவரை கைது செய்து பெங்களூரு அழைத்து வந்தனர்.
அவரிடம் விசாரித்ததில், அவர் ஆந்திராவை சேர்ந்த சிவாஜி, 24, எனவும், தங்கும் விடுதியில் திருடுவதையே தொழிலாக செய்ததும் தெரிந்தது. இதுவரை, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12 மொபைல் போன்கள், 10 லேப்டாப்கள் திருடியதை ஒப்புக்கொண்டார்.
தங்கும் விடுதியில் பூட்டப்படாமல் இருக்கும் அறைகளுக்குள் நுழைந்து திருடுவது, திருடிய பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்தது தெரிந்தது.
