தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மருந்துகளுக்கு பல மடங்கு அதிக விலை நிர்ணயம் ஆய்வில் 254 நிறுவனங்களின் மோசடி அம்பலம்

 மருந்துகளுக்கு பல மடங்கு அதிக விலை நிர்ணயம் ஆய்வில் 254 நிறுவனங்களின் மோசடி அம்பலம்

 மருந்துகளுக்கு பல மடங்கு அதிக விலை நிர்ணயம் ஆய்வில் 254 நிறுவனங்களின் மோசடி அம்பலம்


ADDED : செப் 27, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு துறையின் ஆய்வில், மருந்து நிறுவனங்களின் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 254க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், உண்மையான விலையை விட, பல மடங்கு விலை அதிகரித்து விற்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசின், தேசிய மருந்துகள் விலை கட்டுப்பாட்டு ஆணையம், சமீப நாட்களாக மருந்துகளின் உற்பத்தி செலவு, விற்பனை விலை விபரங்களை ஆய்வு செய்கிறது. ஒவ்வொரு நிறுவனத்தின் மருந்துகளின் அளவு, விலை உட்பட அனைத்து தகவல்களையும், இணையதளத்தில் வெளியிடுகிறது.

ஆயிரம் மடங்கு இதுபோன்று, ஆய்வு செய்ததில் சில நிறுவனங்கள், உற்பத்தி செலவை விட ஆயிரம் மடங்கு அதிகமான விலை நிர்ணயித்து, நோயாளிகளிடம் கொள்ளையடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பற்றி ஆய்வு செய்யும்படி, மத்திய என்.பி.பி.ஏ., அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு துறை கமிஷனர் சீனிவாஸ் தலைமையிலான அதிகாரிகள், ஆய்வில் ஈடுபட்டனர்.

மாநிலம் முழுதும், 254 மருந்துகளின் விலை, ஆயிரம் மடங்கு அதிகம் இருப்பதை, அடையாளம் கண்டுள்ளனர். குறைந்த விலைக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவ கருவிகளை வாங்கி, நோயாளிகளுக்கு அதிகமான பில் போடுகின்றனர். பிரபலமான மருந்து நிறுவனம் ஒன்று, 86 ரூபாய் விலையுள்ள மருந்தை, சில்லரை விலையில், 4,528 ரூபாய் நிர்ணயித்துள்ளது தெரிய வந்துள்ளது.

மற்றொரு நிறுவனத்தின் 160 ரூபாய் மதிப்புள்ள மருந்து, 7,110 ரூபாய் சில்லரை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில மருந்துகளின் விலை 500 மடங்கு, சில மருந்துகளின் விலை 1,00-0 மடங்கு நிர்ணயித்துள்ளது.

இதய நோய், புற்றுநோய், சிறுநீரகம், மூச்சு திணறல், நரம்பு நோய் உட்பட பல்வேறு மருந்துகளின் உற்பத்தி விலையுடன் ஒப்பிட்டால், விற்பனை விலை மிக அதிகம் இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது மக்களுக்கு சுமை மட்டுமல்ல, மோசடியாகும்.

நிறுவனங்கள் பட்டியல் இது குறித்து அனைத்து தகவல்களுடன், எப்.டி.ஏ., கமிஷனர் சீனிவாஸ், தேசிய மருந்துகள் விலை கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் மிக அதிகமான லாபம் பெறும், 254 மருந்து நிறுவனங்களின் பட்டியலை அனுப்பியுள்ளார்.

மருந்து விலை கட்டுப்பாட்டு சட்டத்தின் படி, உடனடியாக மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். அவசியம் ஏற்பட்டால், விலையை பரிசீலித்து, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us