தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மாயமான கதக் உதவி பொறியாளரை தேடி கண்டுபிடிக்க  5 தனிப்படைகள்! ஒப்பந்ததாரர்கள் தொல்லையால் காணாமல் போனதாக 'திடுக்'

மாயமான கதக் உதவி பொறியாளரை தேடி கண்டுபிடிக்க  5 தனிப்படைகள்! ஒப்பந்ததாரர்கள் தொல்லையால் காணாமல் போனதாக 'திடுக்'

மாயமான கதக் உதவி பொறியாளரை தேடி கண்டுபிடிக்க  5 தனிப்படைகள்! ஒப்பந்ததாரர்கள் தொல்லையால் காணாமல் போனதாக 'திடுக்'


ADDED : செப் 27, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே.ஆர்.ஐ.டி.எல்., எனும் கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின், கதக் மாவட்ட உதவி பொறியாளர் பர்வீஸ் தார்வாட், 34. இவர் மாவட்டத்தில் நடக்கும் குடிநீர் திட்ட பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு அரசிடமிருந்து பணம் பெற்று தருவதை பிரதான வேலையாக செய்தார்.

போலீசில் புகார் இவர், பெங்களூரில் நடக்கும் அலுவலக ரீதியான நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதாக, தன் குடும்பத்தினரிடம் கூறி விட்டு, கடந்த 13ம் தேதி வீட்டை விட்டு சென்றார்.ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை.

அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், பெட்டகேரி போலீஸ் நிலையத்தில் 16ம் தேதி புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணையில், பர்வீஸ் எழுதிய கடிதம் ஒன்று நேற்று முன்தினம் சிக்கியது. அக்கடிதத்தில், 'வளர்ச்சி பணிகளுக்கான நிதியை மாநில அரசு விடுவிக்காததால் ஒப்பந்ததாரர்கள் மிரட்டுகின்றனர்; மன அழுத்தத்தால், தற்கொலை செய்து கொள்ள போகிறேன்' என குறிப்பிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், பர்வீஸ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எங்கேயும் தலைமறைவாக இருக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இந்த விஷயத்தை மையப்படுத்தி காங்கிரஸ் அரசை குற்றஞ்சாட்டி, கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். 'பொறியாளர் காணாமல் போனதற்கு, காங்கிரஸ் அரசே பொறுப்பு' என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம் சாட்டினார்.

இவ்வழக்கில் போலீஸ் விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. பர்வீஸ், கதக்கிலிருந்து பெங்களூருக்கு சென்று, அங்கிருந்து ஆந்திராவின் விஜயவாடாவுக்கு சென்றார். அங்கு சென்றதும், தன் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்தார். வீட்டிலிருந்து கிளம்பும் போது, 40,000 ரூபாய் எடுத்து சென்றார். அவரது மொபைல் எண், ஏ.டி.எம்., கார்டு ஆகியவை இதுவரை 'பிளாக்' செய்யப்படாமல் இருப்பது தெரிந்தது.

அவரை கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகளை எஸ்.பி., மிதுன் நேற்று அமைத்தார். இந்த படைகள், துணை எஸ்.பி., முர்துஜா காத்ரியின் மேற்பார்வையில் செயல்படும் எனவும் தெரிவித்தார்.

எஸ்.பி., மிதுன் மேலும் கூறியதாவது:

பர்வீசின் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விபரங்களை சேகரிக்க, ஹாவேரியில் உள்ள அவரது சொந்த வீடு, பிற உறவினர்களிடம் விசாரணை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.

இரண்டு குழுக்கள் அவரது மொபைல் போன் சிக்னல் கடைசியாக ஆந்திரா, விஜயவாடாவை காண்பித்துள்ளது. இதனால், விஜயவாடா, ஹைதராபாதில் அவரை தேடுவதற்கு இரண்டு குழுக்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

பெங்களூரில் உள்ள கே.ஆர்.ஐ.டி.எல்., அலுவலகம், பெங்களூரு ரயில்வே நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காட்சிகளை சரிபார்க்கும் பணியை ஒரு குழுவினர் செய்வர்.

மற்றொரு குழுவினர், பர்வீஸ் தன்னுடைய மொபைல் போனில் யாரை எல்லாம் தொடர்பு கொண்டு பேசினார் என்பதை கண்டறியும் பணியில் ஈடுபடுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் மீட்கப்படுவார் கதக் மாவட்டத்தை சேர்த்த நாயக் என்பவர், பர்வீஸ் ஒழுங்காக வேலை பார்க்கவில்லை என மூன்று முறை புகார் அளித்தார். இது குறித்து, பர்வீஸ் மீது துறை ரீதியான விசாரணை நடக்கிறது. பணி நடக்கும் இடங்களை அவர் நேரில் ஆய்வு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பர்வீஸ், இதேபோன்று முன்பும் ஒரு முறை காணாமல் போய், 12 நாட்களுக்கு பிறகு அஜ்மீரிலிருந்து மீட்டு வரப்பட்டார். தற்போது, அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஹைதராபாத்தில் அவரது நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. அவர் விரைவில் கண்டறியப்படுவார். - சிவகுமார், முதல்வர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us