/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அற்புதமான நகரம் பெங்களூரு வெளிநாட்டு பெண் பரவசம்
/
அற்புதமான நகரம் பெங்களூரு வெளிநாட்டு பெண் பரவசம்
ADDED : ஆக 04, 2025 05:19 AM

பெங்களூரு: வெளிநாட்டு பெண், பெங்களூரில் சுற்றுலாவை முடித்து கொண்டு, சொந்த நாட்டுக்கு திரும்பும் போது, பெங்களூரை விட்டு பிரிய மனம் இல்லாமல் கண்ணீர் விட்டார். இன்ஸ்டாகிராமில் உருக்கத்துடன் பேசியது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவின் பெலாரஸ்சை சேர்ந்த அரினா, 20, என்பவர் சுற்றுலாவுக்காக பெங்களூரு வந்திருந்தார். இங்குள்ள பூங்காக்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், புட் ஸ்ட்ரீட் உட்பட பல இடங்களை கண்டு ரசித்தார். இரண்டு வாரங்கள் பெங்களூரில் இருந்த இவர், இரண்டு நாட்களுக்கு முன், சொந்த நாட்டுக்கு புறப்பட்டார்.
விமானத்தில் ஏறும் போது, நகரை விட்டு பிரிய மனம் இல்லாமல் கண்ணீர் சிந்தியது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நகரை பற்றி, இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
அவர் கூறியுள்ளதாவது:
இதற்கு முன் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். ஆனால், இந்தியா அளவுக்கு வேறு எந்த நாடுகளும் என்னை ஈர்க்கவில்லை. இந்தியர்கள் மிகவும் நல்லவர்கள். மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்புகிறேன். குறிப்பாக பெங்களூரில் 15 நாட்களை கழித்தேன். இங்கு பல்வேறு கலாச்சாரங்கள் உள்ளன. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதங்கள் உள்ளன.
மக்கள் அன்புடன் பேசுகின்றனர். சாலை ஓரம் இரண்டு பக்கங்களிலும் வரிசையான வீடுகள், இங்குள்ள சுற்றுச்சூழல் அற்புதமாக உள்ளது.
நான் பெங்களூரு சுற்றுலா முடிந்த கடைசி நாளன்று, இங்குள்ள கலாச்சாரத்தை விவரிக்கும் உடை வாங்கினேன். பூஜைகளில் பங்கேற்றேன். கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தேன். இந்த அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
பெங்களூரை விட்டு செல்லவே, எனக்கு கஷ்டமாக உள்ளது. நான் பெங்களூரின் அன்பை இழந்து செல்கிறேன். என் மனம் பாரமாக இருக்கிறது. ஆனால் நான் செல்ல வேண்டியது கட்டாயம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.