ADDED : ஏப் 01, 2026 04:04 AM

அ நிறம் | அளவு
தேவனஹள்ளி: இந்திய தேசிய மனித உரிமைகள் கவுன்சில் சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடுவதன் முன்னேற்பாடுகள் குறித்து தேவனஹள்ளியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் இந்திய தேசிய மனித உரிமைகள் கவுன்சிலின் புதிய பொறுப்பாளர்களுக்கு நியமன சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அம்பேத்கர் பிறந்தநாள் விழா, இம்மாதம் 14ல் நடத்துவது குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்திய தேசிய மனித உரிமைகள் கவுன்சிலின் தேசிய தலைவர் ராமச்சந்திரப்பா, கவுரவ தலைவர் சம்பத் குமார், புதிய நிர்வாகிகள் சீனிவாஸ், பிரேம்குமார், டாக்டர் எம்.ராஜு, பி.மஞ்சுநாத், சிவகுமார் ஆகியோரும்; மகளிர் அணியை சேர்ந்த மஞ்சுளா, கலாவதி, லதா, லோகேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.
