/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
செயலி மூலம் ஆம்புலன்ஸ்கள் முன்பதிவு செய்யும் திட்டம்
/
செயலி மூலம் ஆம்புலன்ஸ்கள் முன்பதிவு செய்யும் திட்டம்
செயலி மூலம் ஆம்புலன்ஸ்கள் முன்பதிவு செய்யும் திட்டம்
செயலி மூலம் ஆம்புலன்ஸ்கள் முன்பதிவு செய்யும் திட்டம்
ADDED : ஆக 31, 2025 11:24 PM

பெங்களூரு: ஆம்புலன்ஸ்களை செயலிகள் மூலம் முன்பதிவு செய்யும் திட்டத்தை சுகாதாரத்துறை கொண்டு வருகிறது.
கர்நாடகாவில் அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில் புதிய திட்டத்தை சுகாதாரத்துறை வகுத்து உள்ளது. ஓலா, ஊபர் போன்ற செயலிகளில் வாகனங்களை முன்பதிவு செய்வது போல, ஆம்புலன்ஸ்களையும் செயலிகள் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்காக, தனி செயலி உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆம்புலன்ஸ்களை சுலபமாக மக்கள் பெற முடியும்.
இது குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:
கர்நாடக தனியார் மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் ஆம்புலன்ஸ் சேவைகள் கொண்டு வரப்பட உள்ளன. ஆம்புலன்ஸ் சேவைகளை தனியார் மருத்துவமனைகள் நிர்வகிப்பதை போலவே, அரசும் நிர்வகிக்கும். ஆம்புலன்சில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும். வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து நிலையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதையும் செயலியிலேயே தேர்வு செய்து கொள்ளலாம். ஆம்புலன்ஸ்கள் முன்பதிவு செய்வோரிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்; அதிக கட்டணம் வசூலிக்கப்படாது. இத்திட்டம் செயல்படுத்துவது குறித்து மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ்களை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வர்.
கர்நாடகாவில் உள்ள 223 மருத்துவர்களுக்கான காலி பணியிட ங்கள் விரைவில் நிரப்பப்படும். அனைத்து தாலுகா மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் கர்ப்பிணியர், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.