sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆம்புலன்சில் பிரசவம் ஊழியர்களுக்கு பாராட்டு

 ஆம்புலன்சில் பிரசவம் ஊழியர்களுக்கு பாராட்டு

 ஆம்புலன்சில் பிரசவம் ஊழியர்களுக்கு பாராட்டு


ADDED : நவ 20, 2025 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2025 03:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சாம்ராஜ்நகர்: மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கர்ப்பிணிக்கு ஆம்புலன்சிலேயே பெண் குழந்தை பிறந்தது.

சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின், குரட்டி ஹோசூரு கிராமத்தில் வசிப்பவர் ஷில்பா, 24. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன் தினம் இரவு, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

முதலில் கவுதல்லி மருத்துவமனைக்கு சென்றனர். அங்குள்ள டாக்டர்கள், கொள்ளேகாலுக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர்.

அதன்படி அங்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். வழியில் ஷில்பாவுக்கு வலி அதிகரித்தது. இதனால் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ராணி மற்றும் நாகராஜு ஆம்புலன்சை சாலை ஓரமாக நிறுத்தினர். ஷில்பாவுக்கு பிரசவம் பார்த்தனர். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

அதன்பின் தாய், குழந்தையை கொள்ளேகால் மருத்துவமனையில் அனுமதித்தனர். தாயும், சேயும் ஆரோக்கியமாக உள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சமயோஜிதமாக செயல்பட்டு, பிரசவம் பார்த்ததால் இரண்டு உயிர்களும் காப்பாற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us