/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒரு மணி நேரம் கிராமத்தின் குளத்தில் விளையாடிய யானை
/
ஒரு மணி நேரம் கிராமத்தின் குளத்தில் விளையாடிய யானை
ஒரு மணி நேரம் கிராமத்தின் குளத்தில் விளையாடிய யானை
ஒரு மணி நேரம் கிராமத்தின் குளத்தில் விளையாடிய யானை
ADDED : மே 18, 2025 11:18 PM

சிக்கமகளூரு: உணவு தேடி கிராமத்துக்குள் நுழைந்த யானை, ஒரு மணி நேரம் அங்கிருந்த குளத்தில் விளையாடி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
சிக்கமகளூரு மாவட்டம் கம்மரகோடு கிராமத்தின் அருகில் உள்ள வனப்பகுதியில் ஒன்றரை மாதங்களாக சுற்றித்திரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைய முற்பட்டது. கிராமத்தினரின் சத்தத்தில் அங்கிருந்து ஓடியது.
இந்நிலையில் நேற்று காலை மீண்டும் கிராமத்துக்குள் நுழைந்த யானை, அங்கும், இங்கும் ஓடியது. பின், அங்கிருந்த குளத்தில் இறங்கியது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒரு மணி நேரத்துக்கும் மேளாக குளத்திலேயே இருந்த யானை, தண்ணீரை பீய்ச்சியடித்து விளையாடி கொண்டிருந்தது. அதன் பின் அங்கு வந்த வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
இரவு நேரத்தில் ஊருக்குள் வரும் யானை, காபி எஸ்டேட்டில் விளைச்சல்களை நாசப்படுத்துகிறது. அசம்பாவிதம் நடப்பதற்கு முன், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விடும்படி கிராமத்தினர், வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டு கொண்டுள்ளனர்.