/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்.,கில் இருந்து வெளியேறுகிறேன் இன்ஜினியரின் உணர்ச்சிபூர்வ பதிவு
/
பெங்.,கில் இருந்து வெளியேறுகிறேன் இன்ஜினியரின் உணர்ச்சிபூர்வ பதிவு
பெங்.,கில் இருந்து வெளியேறுகிறேன் இன்ஜினியரின் உணர்ச்சிபூர்வ பதிவு
பெங்.,கில் இருந்து வெளியேறுகிறேன் இன்ஜினியரின் உணர்ச்சிபூர்வ பதிவு
ADDED : ஜூலை 24, 2025 11:22 PM

பெங்களூரு: பெங்களூரில் இருந்து வெளியேறுவது குறித்து, இன்ஜினியர் ஒருவர் உணர்ச்சிபூர்வமான பதிவு, சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.
கர்நாடக தலைநகரான பெங்களூரு, இன்று உலக அளவில் வேகமாக வளர்ந்துள்ளது. பன்னாட்டு - ஐ.டி., நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன.
உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களும் உள்ளன. இதனால் நாட்டின் பிற மாநிலத்தினர், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் வேலை, கல்விக்காக பெங்களூருக்கு வருகின்றனர்.
ஒரு சிலருக்கு இங்கு உள்ள சூழல், வானிலை ஒத்துப்போகாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலோனார் இங்கு வசிப்பதை விரும்புகின்றனர்.
பல ஆண்டுகள், பெங்களூரில் வசித்தவர்களுக்கு, நகரை விட்டு வெளியேறுவது மனதிற்கு ஒருவித பாரமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
நட்புகள் அந்த வகையில், 'கோல்ட்மேன் சாக்ஸ்' என்ற நிறுவனத்தின் முன்னாள் துணை தலைவரும், இன்ஜினியருமான ரோஹித் தோஷி என்பவர், சமூக வலைதளமான 'லிங்க்ட்இன்'னில் வெளியிட்ட பதிவு:
பெங்களூரு எப்போதும் என்னுள் இருக்கும் ஒரு இடம். நான் இங்கு வேலைக்காக வந்தேன். தற்போது பெங்களூரில் இருந்து புறப்படுகிறேன்.
இங்கு எனக்கு கிடைத்த நட்புகள், நண்பர்களிடம் பேசிய கதைகள் எப்போதும் எனது இதயத்தில் இருக்கும்.
'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில் நள்ளிரவில் காபி குடித்தது முதல் நந்தி மலைக்கு பயணம் செய்தது வரை, பெங்களூரில் வசித்த ஒவ்வொரு நாளும் அற்புதமாக இருந்தது.
கப்பன் பார்க், லால்பாக், எம்.ஜி.ரோடு, சர்ச் தெரு, விதான் சவுதா, மல்லேஸ்வரம், இந்திராநகர் போன்ற பிரபல இடங்களை பார்வையிட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இருந்தேன். அனைத்தையும் பார்த்துவிட்டேன்.
பணப்பை பெங்களூரு மக்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் போக்குவரத்து அமைப்பு உள்ளது. பணப்பையை காலி ஆக்கும் வகையில் வாழ்க்கை முறை உள்ளது.
நீங்கள் உங்கள் குடையை மடக்கும்போது எதிர்பாராத மழை பெய்யும். இவை அனைத்தையும் மீறி பெங்களூரு அழகாக இருக்கிறது.
சொந்த காலில் எப்படி நிற்பது என்றும்; குழப்பமான சூழ்நிலையில் தெளிவான முடிவு எடுப்பது பற்றியும் பெங்களூரு எனக்கு கற்றுக் கொடுத்தது. கணிக்க முடியாத வானிலை ஆளுமையாக இருக்கும் நகரம் என்பதையும், பெங்களூரு கற்றுக் கொடுத்துள்ளது. நன்றி பெங்களூரு. இங்கு வாழ்க்கை எளிதானது அல்ல. ஆனால் அர்த்தமுள்ளதாக இருந்தது.
இவ்வாறு பதிவிட்டு இருந்தார்.
இந்த உணர்ச்சிப்பூர்வமான பதிவு பரவிய நிலையில், 'பெங்களூரில் கிடைக்கும் அனுபவம் வேறு எங்கும் கிடைப்பது இல்லை.
'இங்கிருந்து வெளியேறும் நிமிடம் மனதிற்கு கனமாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு பிறகு வாழ்க்கையை திரும்பி பார்த்தால், பெங்களூரில் கழித்த நாட்களை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்' என்றும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.