வாக்காளர் பட்டியலில் பெயர் அதிகாரிகளுக்கு அன்புகுமார் உத்தரவு
வாக்காளர் பட்டியலில் பெயர் அதிகாரிகளுக்கு அன்புகுமார் உத்தரவு
ADDED : செப் 20, 2026 11:19 PM

பெங்களூரு: '' வாக்காளர் பட்டியலில், 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியான வாக்காளர் பெயர் விடுபடாமல் பார்த்து கொள்ள வேண்டும் ,'' என, மாநில தலைமை தேர்தல் அ திகாரி அன்பு குமார் தெ ரிவித்தார்.
பெங்களூரு மத்திய மாநகராட்சி சார்பில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருப்ப பணிகள் நடந்து வருகின்றன. இதை மாநில தேர்தல் தலைமை அதிகாரி அன்பு குமார் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி, எஸ்.ஐ.ஆர்., செயல்பாட்டின் போது, 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியான வாக்காளர்களின் பெயர் விடுபடாமல் பார்த்து கொள்ள வேண்டும்,.'' என்றார்.
ஒவ்வொரு வாக்காளரும் இந்நாட்டின் மதிப்புமிக்க சொத்து. அரசின் பல சலுகைகள் பெறவும், வாக்களிக்கும், அவர்களுக்கு வாக்காளர் அட்டை தேவைப்படுகிறது. தகுதி உள்ள அனைவருக்கும் அதை பெறும் உரிமை உண்டு.
மூத்த குடிமக்கள், பெண்கள், இளம் தலைமுறையினரிடம் அதிகாரிகள் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். பி.எல்.ஏ., எனும் பிளாக் அலுவலர்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம். தகுதியானவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
