ADDED : மே 29, 2026 12:10 AM
அ நிறம் | அளவு
ஷிவமொக்கா: ஷிவமொக்காவின் சிக்கந்துார் சவுடேஸ்வரி கோவிலுக்கு வந்த ஆந்திராவை சேர்ந்தவர், ஷராவதி ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மா வட்டம், ராயதுர்கா தாலுகாவின் கலகள்ளி கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ், 35. தன் குடும்பத்தினருடன், ஷிவமொக்கா மாவட்டம் சிக்கந்துாரில் உள்ள சாமுண்டீஸ்வரி தேவியை தரிசிக்க வந்திருந்தார்.
கோவிலில் சுவாமியை தரிசனம் செய்த பின், ஷராவதி ஆற்றில் குளிக்க சென்றார். ஆழமான பகுதிக்கு சென்ற அவர், தத்தளிக்க துவங்கினார். இதை பார்த்த உறவினர்கள், உதவி கேட்டு கூச்சலிட்டனர்.
வீரர்கள் வருவதற்கள் அவர் நீரில் மூழ்கினார். உடனடியாக, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், பல மணி நேரம் தேடுதலுக்கு பின், உமேசின் உடலை மீட்டனர்.
