/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காரை துாக்கி வீசிய காட்டு யானை நாய்கள் குரைத்ததால் கோபம்
/
காரை துாக்கி வீசிய காட்டு யானை நாய்கள் குரைத்ததால் கோபம்
காரை துாக்கி வீசிய காட்டு யானை நாய்கள் குரைத்ததால் கோபம்
காரை துாக்கி வீசிய காட்டு யானை நாய்கள் குரைத்ததால் கோபம்
ADDED : ஆக 21, 2025 10:59 PM

ஹாசன்: தெருநாய்கள் குரைத்ததால், ஆக்ரோஷமடைந்த காட்டு யானை, சாலையில் நின்றிருந்த காரை, துாக்கி வீசியதால் கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகாவின், அரேஹள்ளி கிராமத்தில் சில நாட்களாக, ஒற்றை காட்டு யானை நடமாடியது. இதே யானை ஓராண்டுக்கு முன்பு, கரடி மற்றும் வேறொரு காட்டு யானையுடன் சண்டையிட்டு தாக்கிய சம்பவம் நடந்தது. இந்த யானைக்கு கிராமத்தினர், 'கேப்டன்' என, பெயரிட்டிருந்தனர்.
தற்போது அவ்வப்போது கிராமத்துக்குள் நுழைந்து, அட்டகாசம் செய்து மக்களை அச்சுறுத்துகிறது. பயிர்களை மிதித்து பாழாக்குகிறது. யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறைக்கு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நேற்று அதிகாலை, யானை கிராமத்துக்குள் நுழைந்தது. இதை கண்ட தெருநாய்கள் பெருங்குரலில் குரைக்க துவங்கின.
நாய்கள் குரைத்ததால், ஆக்ரோஷமடைந்த யானை, மீனா என்பவர் தன் வீட்டு முன் நிறுத்தியிருந்த காரை, தந்தத்தால் குத்தித் துாக்கி வீசியது.
இதில் கார் நொறுங்கியது. இந்த சம்பவத்தால், கிராமத்தினர் பீதியடைந்துள்ளனர். தகவலறிந்த வனத்துறையினர் கிராமத்துக்கு வந்து, விசாரித்தனர். யானையை விரட்ட முயற்சிக்கின்றனர்.