/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பல்கலை காலி பணியிடங்கள் பூர்த்தி செய்வதாக அறிவிப்பு
/
பல்கலை காலி பணியிடங்கள் பூர்த்தி செய்வதாக அறிவிப்பு
பல்கலை காலி பணியிடங்கள் பூர்த்தி செய்வதாக அறிவிப்பு
பல்கலை காலி பணியிடங்கள் பூர்த்தி செய்வதாக அறிவிப்பு
ADDED : மார் 18, 2025 05:04 AM
பெங்களூரு: ''பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,'' என, மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்தார்.
மேல்சபையில் நேற்று நடந்த விவாதம்:
பா.ஜ., - சங்கனுார்: மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன? ஓய்வூதியம் கிடைக்காத ஊழியர்களுக்கு பணம் வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
உயர் கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர்: பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் சராசரியாக 2,800 காலி பணியிடங்கள் உள்ளன.
இப்பிரச்னையை சரிசெய்யும் நோக்கில், விரிவான மதிப்பாய்வை நடத்தும் வகையில், பொறுப்பு துணைக் குழு உருவாக்கப்பட்டு உள்ளது.
இக்குழுவின் அறிக்கை கிடைத்த பின், இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது எளிதாக இருக்கும். காலியாக உள்ள பணியிடங்கள் படிப்படியாக பூர்த்தி செய்யப்படும்.
ஓய்வூதியம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண்பதற்காக, 70 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் படிப்படியாக ஓய்வூதியம் வழங்கப்படும்.
பல்கலைக்கழகங்களில் நிதி ஆதாரங்களை அதிகரிக்கவும், செலவுகளை குறைக்கவும் பல்கலைக்கழக திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.