சாலையோரத்தில் கார் நிறுத்த ஆண்டு கட்டணம்: அமைச்சர் ராமலிங்க ரெட்டி எதிர்ப்பு
சாலையோரத்தில் கார் நிறுத்த ஆண்டு கட்டணம்: அமைச்சர் ராமலிங்க ரெட்டி எதிர்ப்பு
ADDED : ஆக 26, 2026 02:53 AM

பெங்களூரு: பெங்களூரில், சாலையோரத்தில் கார் நிறுத்த ஆண்டுக்கு, 25,000 ரூபாய் கட்டணம் வசூலிப்பதற்கு, அமைச்சர் ராமலிங்க ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் சிவகுமாருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பெங்களூரில் வீட்டின் முன்புள்ள சாலையில் காரை நிறுத்துவதற்கு, ஆண்டுக்கு 15,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க உள்ளதாக ஜி.பி.ஏ., அறிவித்துள்ளது. இதற்கு, வன அமைச்சர் ராமலிங்க ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் சிவகுமாருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சட்ட விரோதமாக, நீண்ட நாட்களாக சில கார்கள் சாலையோரத்தில் நிற்கின்றன. இதை அகற்றினால், போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு உதவும். அதே சமயம், பழைய குடியிருப்பு, சிறிய வீடுகளில் வசிக்கும் பல நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் காரை நிறுத்துவதற்கு இடவசதி இல்லை. இதனால், அவர்கள் சாலையில் காரை நிறுத்துகின்றனர்.
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவை கருத்தில் கொள்ள வேண்டும். கார் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால், நடுத்தர வர்க்கத்தினருக்கு நிதிச்சுமை ஏற்படும்.
எனவே, கார் நிறுத்த வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மாநில அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். இது குறித்து, பெங்களூரு எம்.எல்.ஏ.,க்கள், குடியிருப்பு நல சங்கங்கள், முக்கிய பிரமுகர்களுடன் கலந்து ஆலோசிக்குமாறு முதல்வர் சிவகுமாருக்கு கோரிக்கை வைக்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளார்.
