மே 1 முதல் மைசூரு - ஹைதராபாதுக்கு மேலும் ஒரு விமான சேவை துவக்கம்
மே 1 முதல் மைசூரு - ஹைதராபாதுக்கு மேலும் ஒரு விமான சேவை துவக்கம்
ADDED : ஏப் 18, 2026 06:00 AM

மைசூரு: ''மே, 1ம் தேதி முதல் மைசூரில் இருந்து ஹைதராபாதுக்கு மற்றொரு விமான சேவை துவங்க உள்ளது,'' என, பா.ஜ., - எம்.பி., யதுவீர் உடையார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை:
மைசூரில் இருந்து ஹைதராபாதுக்கு மே, 1 ம் தேதி முதல், மற்றொரு விமான போக்குவரத்து துவங்குகிறது. இந்த விமானம் மைசூரில் இருந்து பிற்பகல், 2:20க்கு புறப்பட்டு, மாலை 4:00 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.
ஏற்கனவே, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இருந்து, இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விமான சேவை பயணியருக்கு மேலும் பலனளிக்கும்.
மைசூரில் இருந்து விமான போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய அமைச்சருடன் பலமுறை பேசி உள்ளேன். விமான நிலையம் விரிவாக்கத்துக்கு தடையாக இருக்கும் நிலம் கையகப்படுத்தும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.
அடுத்த சில நாட்களில், நிலம் ஒப்படைக்கப்பட்ட பின், மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுத்து, விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
விரிவாக்கம் மட்டுமின்றி, மைசூரில் இருந்து நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கும், நேரடி விமான சேவை துவங்கும். அதேவேளையில், அதற்கு இணையாக மைசூரும் வளர்ச்சி அடையும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
