/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கள்ளக்காதலி பிரிவு: கல்வி நிறுவன உரிமையாளர் தற்கொலை
/
கள்ளக்காதலி பிரிவு: கல்வி நிறுவன உரிமையாளர் தற்கொலை
கள்ளக்காதலி பிரிவு: கல்வி நிறுவன உரிமையாளர் தற்கொலை
கள்ளக்காதலி பிரிவு: கல்வி நிறுவன உரிமையாளர் தற்கொலை
ADDED : ஏப் 19, 2025 11:14 PM

மாதநாயக்கனஹள்ளி: கள்ளக்காதலி பிரிந்து சென்றதால், கல்வி நிறுவன உரிமையாளர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளி அருகே மகாலியில் வசித்தவர் ஆனந்த், 35. கல்வி நிறுவன உரிமையாளர். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
கடந்த எட்டு ஆண்டுகளாக ஆனந்த்துக்கும், திருமணமான தனியார் பள்ளி ஆசிரியை ஹேமலதா, 33, என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர்.
கடந்த சில மாதங்களாக, ஹேமலதா வேறு ஒருவருடன் நெருங்கி பழகினார். இதை ஆனந்த் தட்டிக் கேட்டதால், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
ஆனந்துடன் பேசுவதையும் ஹேமலதா நிறுத்தினார். மனம் உடைந்த ஆனந்த் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு 'வாட்ஸாப்'பில் வீடியோ பதிவு செய்து, குடும்பத்தினருக்கு அனுப்பி, 'என் சாவுக்கு ஹேமலதா காரணம்' என்று கூறி இருந்தார்.
ஆனந்த் குடும்பத்தினர் அளித்த புகாரில், ஹேமலதாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

