/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரிக்கி ராய் கார் மீது துப்பாக்கி சூடு விசாரணைக்கு அனுராதா ஆஜர்
/
ரிக்கி ராய் கார் மீது துப்பாக்கி சூடு விசாரணைக்கு அனுராதா ஆஜர்
ரிக்கி ராய் கார் மீது துப்பாக்கி சூடு விசாரணைக்கு அனுராதா ஆஜர்
ரிக்கி ராய் கார் மீது துப்பாக்கி சூடு விசாரணைக்கு அனுராதா ஆஜர்
ADDED : ஏப் 28, 2025 07:03 AM

ராம்நகர்: நிழல் உலக தாதா முத்தப்பா ராய் மகன் ரிக்கி ராய், கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வழக்கில், ரிக்கி ராயின் சித்தி அனுராதா விசாரணைக்கு ஆஜரானார்.
மறைந்த முன்னாள் நிழல் உலக தாதா முத்தப்பா ராய். இவரது மகன் ரிக்கி ராய். கடந்த 21ம் தேதி அதிகாலை ராம்நகரின் பிடதியில் ரிக்கி ராய் சென்ற கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
கார் கதவு இடித்ததில் அவரது மூக்கு உடைந்தது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கார் டிரைவர் பசவராஜ் அளித்த புகாரில், முத்தப்பா ராயின் 2வது மனைவி அனுராதா உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவானது.
கொடிகேஹள்ளியில் உள்ள அனுராதா வீட்டிற்கு, போலீசார் சம்மன் கொடுக்க சென்ற போது, அவர் வெளிநாடு சென்றது தெரிந்தது.
இந்த வழக்கில் ரிக்கி ராயின் பாதுகாவலர் மோனப்பா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பிடதி போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை 11:00 மணிக்கு, அனுராதா தனது வக்கீலுடன் வந்தார். இன்ஸ்பெக்டர் சங்கர் நாயக் முன்பு ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடந்தது.
விசாரணைக்கு பின் அனுராதா கூறுகையில், ''எனக்கும், இந்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை. என் மீது ஏன் புகார் கொடுத்தனர் என தெரியவில்லை.
விசாரணையில் அனைத்தும் தெரியும். போலீஸ் மீது நம்பிக்கை உள்ளது. எனக்கும், ரிக்கி ராய்க்கும் இடையில் இருந்த நில பிரச்னை சமரசமாக முடிந்தது.
கடந்த ஆண்டு அக்டோபரில் தான் கடைசியாக அவரை பார்த்தேன்,'' என்றார்.

