/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தேசிய கமிட்டிக்கு நியமனம் கர்நாடக சபாநாயகருக்கு கவுரவம்
/
தேசிய கமிட்டிக்கு நியமனம் கர்நாடக சபாநாயகருக்கு கவுரவம்
தேசிய கமிட்டிக்கு நியமனம் கர்நாடக சபாநாயகருக்கு கவுரவம்
தேசிய கமிட்டிக்கு நியமனம் கர்நாடக சபாநாயகருக்கு கவுரவம்
ADDED : மே 15, 2025 11:13 PM

பெங்களூரு: இந்தியா முழுதும், நான்கு சபாநாயகர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கமிட்டிக்கு கர்நாடக சபாநாயகர் காதரை நியமித்து, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
மஹாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர் கமிட்டி தலைவராக உள்ளார்.
கர்நாடக சபாநாயகர் காதர், நாகாலாந்து சபாநாயகர் ஷரிங்கைன் லாங் குமெல், ஒடிஷா சபாநாயகர் சுரமா பாதி ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவர்.
மாநில சட்டசபைகளில், ஒழுங்கை பின்பற்றவும், விதிமுறைகளை மேம்படுத்துவது குறித்து கமிட்டி ஆய்வு செய்யும்.
சட்டசபை கூட்டத்தொடர்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்து, சிபாரிசுகள் செய்யும்.
அது போன்று மாநில சட்டசபைகளில் சபாநாயகர்களின் அதிகாரம், பொறுப்புகள், விதிமுறைகள் குறித்தும், தேசிய கமிட்டி ஆய்வு செய்யும்.
நான்கு முறை எம்.எல்.ஏ.,வான காதருக்கு, தேசிய கமிட்டியில் இடம் கிடைத்துள்ளது.
இத்தகைய முக்கியமான கமிட்டிக்கு நியமிக்கப்பட்ட கர்நாடகாவின் முதல் சபாநாயகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.