/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பைக் டாக்சிக்கு அங்கீகாரம்? ராமலிங்க ரெட்டி மறுப்பு
/
பைக் டாக்சிக்கு அங்கீகாரம்? ராமலிங்க ரெட்டி மறுப்பு
பைக் டாக்சிக்கு அங்கீகாரம்? ராமலிங்க ரெட்டி மறுப்பு
பைக் டாக்சிக்கு அங்கீகாரம்? ராமலிங்க ரெட்டி மறுப்பு
ADDED : ஜூலை 03, 2025 11:04 PM

பெங்களூரு: “பைக் டாக்சியை சட்டபூர்வமாக்கும் திட்டம், கர்நாடக அரசிடம் இல்லை,” என, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறினார்.
பைக் டாக்சி சேவைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. பயணியர் பாதுகாப்பு, பைக் டாக்சி டிரைவர்கள் நலன் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், புதிய மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல் நெறிமுறைகளை, மத்திய போக்குவரத்து அமைச்சகம் கடந்த 1ம் தேதி வெளியிட்டது.
'பைக் டாக்சி சேவைக்கு தனியார் இருசக்கர வாகனங்களை சட்டபூர்வமாக பயன்படுத்த, மாநில அரசுகளே அனுமதி அளிக்கலாம். ஆனால் இதை அரசுகள், கட்டாயம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை' என, வழிகாட்டுதலில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி அளித்த பேட்டி:
போக்குவரத்து சேவைகளுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்த, மத்திய அரசு வழிகாட்டுதல் வெளியிட்டால் மட்டும் போதாது. இதற்காக போக்குவரத்து சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும். அதன் பின்தான், மாநில அரசு முடிவு எடுக்க முடியும்.
பைக் டாக்சி விஷயத்தில் சாலை பாதுகாப்பு தவிர, பெண் பயணியர் பாதுகாப்பு மிக முக்கியம். சமூக வலைதளங்களில் பைக் டாக்சிக்கு, கர்நாடக அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்ற விவாதம் நடக்கிறது.
ஏதாவது தவறு நடந்தால், அரசை நோக்கி தான் முதலில் விரல் நீட்டுவர். பைக் டாக்சியை சட்டபூர்வமாக்கும் திட்டம் அரசிடம் இல்லை. சீருடை அணிந்துள்ளனர். வரி செலுத்துகின்றனர். பைக் டாக்சி ஓட்டுபவர்கள், எதுவும் செய்வது இல்லை. பைக் டாக்சி ஓட்டுநர்கள், அரசுக்கு ஏதாவது கோரிக்கை வைத்தால் நாங்கள் பரிசீலிப்போம். ஆனால் அது ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.