/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு கடிவாளம்?
/
ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு கடிவாளம்?
ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு கடிவாளம்?
ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு கடிவாளம்?
ADDED : அக் 16, 2025 11:16 PM

பெங்களூரு: 'ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளில், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்பதை தடுக்கும் விதியை, கடுமையாக்க வேண்டும்' என, முதல்வர் சித்தராமையாவுக்கு, அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதி உள்ளார்.
முதல்வருக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கர்நாடக சிவில் சர்வீஸ் நடத்தை விதிகளின்படி, கர்நாடக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் எந்தவொரு அரசியல் நிகழ்ச்சியிலோ, தனியார் சங்கங்கள், அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சியிலோ பங்கேற்கக் கூடாது. அமைப்புகளுக்கு ஆதரவாக பேச கூடாது, உதவி செய்ய கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், சமீப காலமாக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பிற அமைப்புகள் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். விதிகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும். விதியை கடுமையாக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
இந்த கடிதம் குறித்து, பெங்களூரில் நேற்று பிரியங்க் கார்கே அளித்த பேட்டி:
அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தங்கள் வேலையை செய்கின்றனர் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அவர்கள் எங்களை விஞ்சி அரசியல் செய்கின்றனர். நான் யாருக்கும் எதிரானவன் இல்லை.
சமீப காலமாக நடத்தை விதியை மீறி அதிகாரிகள் செயல்படுவதை கவனித்து வருகிறேன். என் துறையில் கூட சில பி.டி.ஓ.,க்கள் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அறிக்கை கேட்டு உள்ளேன். அறிக்கை வந்த பிறகு, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்.
கடந்த 2013ல் பா.ஜ., ஆட்சியில் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக இருந்தபோது, அரசு பள்ளிகளில் எந்த தனியார் நிகழ்ச்சியும் நடத்த கூடாது என்று, பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பிறப்பித்த ஜெகதீஷ் ஷெட்டர், ஆர்.எஸ்.எஸ்., விரோதியா அல்லது தேச துரோகியா என, பா.ஜ., தலைவர்கள் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.