/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹாசனில் மட்டுமா மாரடைப்பு? ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கேள்வி!
/
ஹாசனில் மட்டுமா மாரடைப்பு? ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கேள்வி!
ஹாசனில் மட்டுமா மாரடைப்பு? ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கேள்வி!
ஹாசனில் மட்டுமா மாரடைப்பு? ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கேள்வி!
ADDED : ஜூலை 07, 2025 11:10 PM
பெங்களூரு: ''ஹாசனில் மட்டுமல்ல, நாடு முழுதும் மாரடைப்புகள் ஏற்படுகின்றன. ஹாசனில் மட்டுமே நடக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தாதீர்கள்,'' என, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சு தெரிவித்தார்.
பெங்களூரின் விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஹாசனில் மட்டும் மாரடைப்பு இறப்புகள் நடக்கவில்லை. நாடு முழுதும் நடக்கின்றன. ஊடகத்தினர் ஹாசனில் மட்டும் நடப்பதாக காட்டு கின்றனர். பெங்களூரு, மைசூரு உட்பட மற்ற மாவட்டங்களை ஏன் காட்டுவது இல்லை?
வாழ்க்கை நடைமுறையை மாற்றிக் கொண்டால், எத்தகைய மாரடைப்பும் ஏற்படாது. மற்றொரு பக்கம் கொரோனா தடுப்பூசியால், மாரடைப்பு ஏற்பட்டதாக முதல்வர் சித்தராமையா கூறுகிறார். தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி தயாரித்தாரா? ஆய்வகத்தில் தயாரானது. தடுப்பூசிக்கும், மாரடைப்புக்கும் சம்பந்தம் இல்லை என, அறிக்கை வந்துள்ளது.
வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால், அனைவரும் நன்றாக இருப்பர். ஜெயதேவா மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்து கொள்ளுங்கள். யாரோ கூறும் இடங்களுக்கு செல்லாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.