/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முஸ்லிம்கள் சிறுபான்மையினரா? பா.ஜ., - எம்.எல்.சி., கேள்வி!
/
முஸ்லிம்கள் சிறுபான்மையினரா? பா.ஜ., - எம்.எல்.சி., கேள்வி!
முஸ்லிம்கள் சிறுபான்மையினரா? பா.ஜ., - எம்.எல்.சி., கேள்வி!
முஸ்லிம்கள் சிறுபான்மையினரா? பா.ஜ., - எம்.எல்.சி., கேள்வி!
ADDED : ஏப் 14, 2025 06:56 AM

சிக்கமகளூரு : ''கர்நாடகாவில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட முஸ்லிம்கள் எப்படி சிறுபான்மையினர் ஆவர்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., சி.டி.ரவி கேள்வி எழுப்பினார்.
சிக்கமகளூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அரசியலமைப்பு சாசனத்தின் படி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது. தற்போது வரை அதிகாரப்பூர்வமாக ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு வெளியிடவில்லை.
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வெளியான தரவுகளை வைத்து பார்த்தால், மாநிலத்தில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை உடையவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். அப்படி இருக்கையில், அவர்களை எப்படி சிறுபான்மையினர் என கூற முடியும்.
இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, அதற்கு ஆதரவாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இது, இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான பா.ஜ.,வின் நிலைப்பாட்டை காட்டுகிறது. சமூக நீதி என்பது பா.ஜ.,வின் உறுதிப்பாடு.
சமூகத்தில் பிளவுகளை உண்டாக்கும் வகையில் செயல்படுவோருக்கு பா.ஜ., ஆதரவு அளிக்காது. ஆனால், சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஹிந்து மதத்தில் உள்ளவர்களை ஜாதி அடிப்படையில் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

