/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாங்கள் பிச்சைக்காரர்களா? கேட்கிறார் காங்., - எம்.எல்.ஏ.,
/
நாங்கள் பிச்சைக்காரர்களா? கேட்கிறார் காங்., - எம்.எல்.ஏ.,
நாங்கள் பிச்சைக்காரர்களா? கேட்கிறார் காங்., - எம்.எல்.ஏ.,
நாங்கள் பிச்சைக்காரர்களா? கேட்கிறார் காங்., - எம்.எல்.ஏ.,
ADDED : டிச 12, 2025 06:54 AM
பெலகாவி: கர்நாடகாவின் வடமாவட்டங்களின் எம்.எல்.ஏ.,க்கள், பெங்களூரு சென்று பிச்சைக்காரர்களை போன்று பிச்சையெடுக்க வேண்டும். இறுதியாக பத்து பைசா, இருபது பைசா கிடைக்கிறது என காங்கிரஸ் உறுப்பினர் ராஜு காகே, சட்டசபையில் அதிருப்தி தெரிவித்தார்.
சட்டசபையில் வடமாவட்டங்கள் குறித்து நடந்த விவாதத்தில் அவர் பேசியதாவது:
வடமாவட்டங்களின் எம்.எல்.ஏ.,க்கள் இங்கு வந்து அனைவரின் முன்னிலையில் கைகூப்பி நிற்க வேண்டும். இது குறித்து, குரல் கொடுத்தேன். ஆனால் கட்சிக்கு எதிராக பேசியதாக, அவப்பிரசாரம் செய்தனர்.
அரசுக்கு எதிராக பேசவில்லை; அதிகாரிகள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என, கூறினேன். வட கர்நாடகாவை தனி மாநிலமாக்க கோரி பிரதமர், முதல்வருக்கு கடிதம் எழுதினேன்.
வடமாவட்டங்களின் எம்.எல்.ஏ.,க்கள், பெங்களூரு சென்று பிச்சை எடுக்கும் நிலைமை உள்ளது. ஆனால் பத்து பைசா, இருபது பைசா கிடைக்கிறது. வட மாவட்டங்களுக்கும், 5,000 கோடி தாருங்கள் என, நான் வேண்டுகோள் விடுக்கிறேன். எங்களில் பலர் இன்னும் பெங்களூரையே பார்த்தது இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது போன்று, அரசின் செயல் உள்ளது. தனி மாநிலம் கோரி, சாகும் வரை நான் போராடுவேன். பெங்களூரில் வருவாய்த்துறை செயலர் கட்டாரியாவிடம், மனு கொடுக்க சென்ற போது, வாங்காமல் எழுந்து சென்றார்.
இவ்வாறு கூறினார்.

